Singapenne Serial: ‘காய்ச்சி எடுக்கும் கருணா; அடித்து அழும் அம்மா;குடோனுக்குள் குசுகுசு; சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
Singapenne Serial: கோகிலா ஆனந்திக்கு போன் செய்து, சொக்கலிங்கம் அடமான நிலத்தை விற்க சூழ்ச்சி செய்யும் விஷயத்தை கூற முயற்சி செய்த போதே, கருணாகரன் ஆனந்தியின் போனை பிடுங்கி உடைத்து விட்டான். - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

சிங்கப்பெண்ணே சீரியல் தொடர்பாக இன்று வெளியான புரோமோவில், குடோனுக்கு ஆனந்தியை அன்பு அழைத்து இருந்த நிலையில், அவள் அழகன் யார் என்று சொல்லப் போகிறீர்களா அன்பு, என்று கேட்டாள். இதையடுத்து அன்பு அழகன் யார் என்பதை உன்னிடம் காண்பிக்கவே போகிறேன் என்று கூறினான். அவன் அதைப் பற்றி பேசும் பொழுதே, கருணாகரன் அங்கிருந்து அவனை அழைக்க, இருவரும் பதறினார்கள்.
இன்னொரு பக்கம் மித்ரா, மகேஷின் அப்பாவிடம் நீங்கள் ஆனந்தியை மகேஷ் காதலிக்கிறான் என்று சொன்ன போதே தடுத்திருக்க வேண்டும் என்று சொல்லி சூழ்ச்சி செய்கிறாள். இதற்கிடையே கோகிலா ஆனந்திக்கு போன் செய்து, சொக்கலிங்கம் அடமான நிலத்தை விற்க சூழ்ச்சி செய்யும் விஷயத்தை கூற முயற்சி செய்த போதே, கருணாகரன் ஆனந்தியின் போனை பிடுங்கி உடைத்து விட்டான். இதனையடுத்து என்ன நடந்தது என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.