Singapenne Serial: குடோனுக்குள் காதல் சடுகுடு.. கருநாகமாய் அலையும் கருணாகரன்! -சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
Singapenne Serial: சொக்கலிங்கம் செய்த சூழ்ச்சியால், ஆனந்தியின் குடும்பம் கதறி அழுது கொண்டிருக்கிறது; மற்றொரு பக்கம் ஆனந்தியிடம் காதலை சொல்வதற்காக அவளை குடோனுக்கு வரச் சொல்லி இருக்கிறான் அன்பு - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

சிங்கப்பெண்ணே சீரியல் தொடர்பாக இன்று வெளியாகி இருக்கும் புரோமோவில் அன்பின் மனசாட்சி, அவன் முன் தோன்றி இனி நான் உன் முன்னே வருவதும், வராததும் உன்னுடைய முடிவில்தான் இருக்கிறது என்று சொல்கிறது. இன்னொரு பக்கம் சொக்கலிங்கம் செய்த சூழ்ச்சியால், ஆனந்தியின் குடும்பம் கதறி அழுது கொண்டிருக்கிறது; மற்றொரு பக்கம் ஆனந்தியிடம் காதலை சொல்வதற்காக அவளை குடோனுக்கு வரச் சொல்லி இருக்கிறான் அன்பு. ஆக, இன்றைய சீரியலில் இது தொடர்பான நிகழ்வுகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
செவரக்கோட்டையில் பாட்டன் சாமியை பார்க்க அழகப்பனும் அவரது குடும்பமும் வந்திருந்தது. அந்த நேரத்தில் ஆனந்தி வீடியோ காலில் வர, பாட்டன் சாமியை தானும் பார்க்க வேண்டும் என்று அப்பாவிடம் கூறினாள் ஆனந்தி. இதையடுத்து அப்பா வீடியோ காலில் பாட்டன் சாமியை காண்பிக்க, அவள் என்ன அலங்காரம் செய்யாமல் இருக்கிறது என்று கடிந்து கொண்டாள்.