Singapenne Serial: ‘சொக்கலிங்கம் வைத்த செக்;ஆட்டம் கண்ட அழகப்பன்;சுட்டிப்பூனையாக அடங்கிய ஆனந்தி! -கயல் சீரியலில் இன்று!-singapenne serial today promo episode on september 09 2024 indicates anbu is prepared to tell anathi about alagan - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singapenne Serial: ‘சொக்கலிங்கம் வைத்த செக்;ஆட்டம் கண்ட அழகப்பன்;சுட்டிப்பூனையாக அடங்கிய ஆனந்தி! -கயல் சீரியலில் இன்று!

Singapenne Serial: ‘சொக்கலிங்கம் வைத்த செக்;ஆட்டம் கண்ட அழகப்பன்;சுட்டிப்பூனையாக அடங்கிய ஆனந்தி! -கயல் சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 09, 2024 11:21 AM IST

Singapenne Serial: இன்னொருபக்கம் அன்பு பொய் சொல்லிவிட்டு ஆனந்தியின் வீட்டிற்குச் சென்றதை கண்டித்து அடித்தார். மற்றொரு பக்கம் ஆனந்தியிடம் அவரது அம்மா, எதுவும் நடக்காதது போல, போனில் பேசினார். -கயல் சீரியலில் இன்று!

Singapenne Serial: ‘சொக்கலிங்கம் வைத்த செக்;ஆட்டம் கண்ட அழகப்பன்;சுட்டிப்பூனையாக அடங்கிய ஆனந்தி! -கயல் சீரியலில் இன்று!
Singapenne Serial: ‘சொக்கலிங்கம் வைத்த செக்;ஆட்டம் கண்ட அழகப்பன்;சுட்டிப்பூனையாக அடங்கிய ஆனந்தி! -கயல் சீரியலில் இன்று!

சிங்கப்பெண்ணே சீரியல் தொடர்பாக இன்று வெளியான புரோமோவில், சொக்கலிங்கம் சொல்லி கடன் கொடுத்தவர் அழகப்பன் குடும்பத்தை எச்சரித்து விட்டு சென்ற நிலையில், இன்னொருபக்கம் அன்பு பொய் சொல்லிவிட்டு ஆனந்தியின் வீட்டிற்குச் சென்றதை கண்டித்து அடித்தார். மற்றொரு பக்கம் ஆனந்தியிடம் அவரது அம்மா, எதுவும் நடக்காதது போல, போனில் பேசினார். இது தொடர்பான நிகழ்வுகள் இன்று சீரியலில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

சிங்கப்பெண்ணே சீரியலில் நேற்றைய தினம் மகேஷ் ஹாஸ்டல் வார்டனுடன் பாசமாக பேசிக் கொண்டிருந்தான். அப்போது அவன் அவரிடம், நீங்கள் எனக்கு சாப்பாடு ஊட்டி விட்ட பொழுது உங்களது கண்ணில் அதிக பாசம் தென்பட்டது. அதனை என்னால் பார்க்க முடிந்தது.

உண்மையில் உங்களுக்கு என்று யாருமே இல்லையா.. இல்லை, யாராவது இருந்து, சில காரணங்களுக்காக அவர்களை வெளி உலகத்திற்கு காண்பிக்காமல் வைத்து இருக்கிறீர்களா என்று கேட்டான். இதையடுத்து என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்த ஹாஸ்டல் வார்டன், அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என்று சமாளித்தார்.

உங்களுக்கென்று யாரும் இல்லை

இந்த நிலையில் மகேஷ் உங்களுக்கென்று யாரும் இல்லை என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நான் உங்களைப் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி, ஆனால் அதற்கு நீங்கள் எனக்கு தினமும் ருசியாக சமைத்து தர வேண்டும் என்று கேட்க, அதற்கென்ன தாராளமாக சமைத்துத் தருகிறேன் என்று கூறினாள் வார்டன்.

இதற்கிடையே அன்புடன் ஆனந்தி பேசிக் கொண்டிருந்த நிலையில், அவரை மகேஷ் காரில் அழைத்துச் சென்று ஹாஸ்டலில் விட்டான். அன்பும், மகேஷும் ஆனந்தி மீது உள்ள காதலை வெளிப்படுத்தும் விதமாக கிஃப்டுகளை கொடுத்தனர். இந்த நிலையில், திடீரென்று மகேஷ் ஆனந்தியை காரில் அழைத்துச் சென்றதை நினைத்துக்கொண்டிருந்த அன்பு , அவரின் காதலை ஆனந்தியிடம் மகேஷ் சொல்லியிருப்பாரோ என்று சந்தேகப்பட்டு கொண்டிருக்கும் பொழுதே, ஆனந்தி ஃபோன் செய்தாள்.

நீங்கதான் அன்பு எல்லாமே

அப்போது அவள், நீங்கள் தான் எனக்கு எல்லாவித கால கட்டத்திலும் உதவியாக இருந்திருக்கிறீர்கள். எனக்கு அழகன் நினைப்பே முற்றிலுமாக நீங்கிவிட்டது என்று சொல்ல, அழகனை நீங்கள் நாளை பார்க்கப் போகிறீர்கள் என்றான் அன்பு. இதையடுத்து குஷியான ஆனந்தி அவன் எப்படி இருப்பான் என்று உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள் என்று கேட்க, கொஞ்சம் பொறுமையாக இருங்கள் நாளை பார்த்து விடலாம் என்று கூறினான்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.