Singapenne Serial: வசமாக சிக்கிய சுயம்புலிங்கம்.. முக்கிய ஆதாரத்தை தேடி பிடித்த அன்பு - சிங்கப் பெண்ணே சீரியல்-singapenne serial today episode on august 31 2024 indicates anbu helps anandhi - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singapenne Serial: வசமாக சிக்கிய சுயம்புலிங்கம்.. முக்கிய ஆதாரத்தை தேடி பிடித்த அன்பு - சிங்கப் பெண்ணே சீரியல்

Singapenne Serial: வசமாக சிக்கிய சுயம்புலிங்கம்.. முக்கிய ஆதாரத்தை தேடி பிடித்த அன்பு - சிங்கப் பெண்ணே சீரியல்

Aarthi Balaji HT Tamil
Aug 31, 2024 11:45 AM IST

Singapenne Serial: பக்கவாக பிளான் போட்டுக் கொடுத்தும் இவர்கள் சொதப்பியதால் மித்ரா அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறி நின்றிருந்தார்.

Singapenne Serial: வசமாக சிக்கிய சுயம்புலிங்கம்.. முக்கிய ஆதாரத்தை தேடி பிடித்த அன்பு - சிங்கப் பெண்ணே சீரியல்
Singapenne Serial: வசமாக சிக்கிய சுயம்புலிங்கம்.. முக்கிய ஆதாரத்தை தேடி பிடித்த அன்பு - சிங்கப் பெண்ணே சீரியல்

காணாமல் போன நகைகள் திரும்ப கிடைத்தால் தனது தந்தையின் மேல் பழி போட்ட பிரசிடெண்ட் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆனந்தி பஞ்சாயத்தில் திட்டவட்டமாக சொல்கிறார். இதை சற்றும் எதிர்பாக்காத பிரசிடண்ட் சுயம்பு லிங்கம் என்ன செய்வது என்று தெரியாமல் தனது கூட்டாளியிடம் என்னடா நடக்குது இங்கே என்று கேட்டு முழிக்கிறார்.

கடும் கோபத்தில் மித்ரா

பக்கவாக பிளான் போட்டுக் கொடுத்தும் இவர்கள் சொதப்பியதால் மித்ரா அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறி நின்றிருந்தார்.

மேலும் நடந்த அனைத்து விஷயத்திற்கும் பிரசிடெண்ட் சுயம்பு லிங்கம் தான் காரணம் என்பதை ஆதாரம் இல்லாததால் ஏற்க மறுக்கிறது பஞ்சாயத்து. உடனே ஆஜரான அன்பு இதே ஊரை சேர்ந்த ஒருவர் சாட்சி சொல்ல தயாராக இருக்கிறார். அவரை நான் அழைத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். அத்துடன் இன்றைய எபிசோட்டிற்கான புரோமோ முடிந்தது.

மீதம் என்ன நடக்கும் என்பதை இன்றைய முழு எபிசோட்டில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

நேற்றைய எபிசோட்

சிங்கப் பெண்ணே சீரியலின், நேற்றைய ( ஆகஸ்ட் 30 ) எபிசோட்டில், கோயில் நகைகள் திருடு போனதற்கு முழு பழியும் ஆனந்தி மற்றும் அவரது தந்தை மீது விழுந்திருக்கிறது. எப்படியாவது தங்கள் மேல் விழுந்த கலங்கத்தை போக்க வேண்டும் என்று முனைப்பில் இருக்கிறார் ஆனந்தி.

முதலில், ஆனந்தியை காணவில்லை என்பதால் அன்பு மற்றும் மகேஷ் காட்டு பக்கம் அவரை தேடிச் சென்றார். அந்த மூன்று திருடர்களுடன் சண்டையிடும் போது ஒருவர் மட்டும் ஆனந்தியை உயிருடன் புதைத்து இருப்பதை அன்பு விடம் சொல்லிவிட்டார். உடனே இந்த விஷயத்தை அன்பு ஓடிச் சென்று மகேஷிடம் கூறினார். அவர் அதிர்ச்சி அடைந்தார்.

ஆனந்தியின் அதிரடி

இதை சற்றும் எதிர்பார்க்காத மகேஷ், ஆதங்கத்தில் தான் காதலிக்கும் பெண் வேறு யாருமில்லை ஆனந்தி தான் என்பதை முதல் முறையாக அன்பு விடம் சொல்லி கதறுகிறார். ஏற்கனவே அன்பு, அழகன் என்ற பெயரில் ஆனந்தியை தீவிரமாக காதலிப்பதால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஆனந்தியை தூக்கி கொண்டு வைத்தியர் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர் மட்டும் உள்ளே இருக்க வேண்டும் என சொல்லி, அன்பு மற்றும் மகேஷை வெளியே அமர வைப்பட்டார்கள். 

காதல் எவ்வளவு ஆழமானது

அப்போது மகேஷ் தனது காதல் எவ்வளவு ஆழமானது என்பதை அன்புவிடம் சொல்லினார். மேலும் அழகன் என்பவர் தான் காதலை இவ்வளவு நாள் சொல்லவில்லை என்று சொல்லி புலம்பினார். 

கண் முழித்த ஆனந்தி

வைத்தியரின் தீவிர சிகிச்சைக்கு பிறகு ஆனந்தி குணமடைந்தார். பின்னர் அன்பு, ஆனந்தி, மகேஷ் மூவரும் கிளம்பி நகையுடன் பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு சென்றார்கள். அங்கு நகைகளை அனைவருக்கு முன்பாக வைப்பதுடன் நேற்றைய ( ஆகஸ்ட் 30 ) எபிசோட் முடிந்தது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.