Singapenne: பக்கா பிளானா இருக்கே.. வலை விரித்த ஆனந்தி.. லிஃப்ட்டில் சிக்கிய மித்ரா, கருணாகரன்-singapenne serial episode today promo on august 3 2024 indicates mithra and karunakaran in trouble - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singapenne: பக்கா பிளானா இருக்கே.. வலை விரித்த ஆனந்தி.. லிஃப்ட்டில் சிக்கிய மித்ரா, கருணாகரன்

Singapenne: பக்கா பிளானா இருக்கே.. வலை விரித்த ஆனந்தி.. லிஃப்ட்டில் சிக்கிய மித்ரா, கருணாகரன்

Aarthi Balaji HT Tamil
Aug 03, 2024 07:08 AM IST

Singapenne: அன்பு, வாட்ச் மேனுக்கு போன் செய்து, ” மித்ரா, கருணாகரன் கொஞ்சம் கூட டென்ஷன் ஆகவில்லையா என கேட்க அவர் இல்லை தம்பி என சொன்னார். அன்பு அப்போ கண்டிப்பா டென்ஷன் பண்ணிவிடுங்க “ என சொல்கிறார்.

பக்கா பிளானா இருக்கே.. வலை விரித்த ஆனந்தி.. லிஃப்ட்டில் சிக்கிய மித்ரா, கருணாகரன்
பக்கா பிளானா இருக்கே.. வலை விரித்த ஆனந்தி.. லிஃப்ட்டில் சிக்கிய மித்ரா, கருணாகரன்

குடும்ப கஷ்டத்தை போக்க சென்னை வருகிறாள் ஹீரோயின் ஆனந்தி. வழக்கம் போல் கிராமத்தில் இருந்து வேலைக்கு வரும் பெண் என்ன கஷ்டத்தை சந்திக்கிறாள் என்பதே கதை. ஆனந்தி வரும் கஷ்டங்களை எப்படி சமாளிக்கிறார் என்பதே சிங்கப்பெண்ணே கதை. தினமும் சன் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் சிங்கப்பெண்ணே சீரியலின் இன்றைய ( ஆகஸ்ட் 3 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இன்றைய ப்ரோமோ

“ என்னையும், அன்புவையும் தவறாக பேசிய ஒவ்வொரு நபருக்கும் பதிலடி கொடுக்க போகிறோம் ” என்று முத்து, ஜெயந்தி, சௌந்தர்யாவிடம் பேசி கொண்டு இருக்கிறார்.

நம் இருவரையும் பிளான் செய்து ஆனந்தி இப்படி லிஃப்ட்டில் மாட்டிவிட்டு இருக்கிறாள் என மித்ரா சொல்ல, அதிர்ச்சி அடைந்த கருணாகரன், என்ன மேடம் சொல்றீங்க என கேட்கிறார்.

டென்ஷன் பண்ணிவிடுங்க

மறுபக்கம் அன்பு, வாட்ச் மேனுக்கு போன் செய்து, ” மித்ரா, கருணாகரன் கொஞ்சம் கூட டென்ஷன் ஆகவில்லையா என கேட்க அவர் இல்லை தம்பி என சொன்னார்.

உடனே அன்பு அப்போ கண்டிப்பா டென்ஷன் பண்ணிவிடுங்க “ என சொல்கிறார். உடனே அவர்கள் மாட்டிக் கொண்ட லிஃப்ட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. பயத்தில் மித்ரா என்ன செய்வது என்று புரியாமல் இருப்பது போன்று ப்ரோமோ முடிந்தது.

இதைப் பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர், “ சிங்கப்பெண்ணேன்ற சீரியல் டைட்டில் ஏத்த மாதிரி இன்னைக்கு எபிசோட்ல ஆனந்தி தீயா வேலை செஞ்சிருக்கம பாக்கா ப்ளான் “ என கமெண்ட் செய்து உள்ளார்.

நேற்றைய எபிசோட்

கருணாகரன் நாம் பேசுவதை பார்த்து கொண்டே இருக்கிறான் அதனால் அவன் தான் இது போன்ற செயல்களில் நம்மை மாட்டிவிட்டு இருக்க வேண்டும் என்ற சந்தேகம் ஆனந்திக்கு ஏற்படுகிறது. அதை அன்புவிடம் சொல்லுகிறார்.

மறுபக்கம் சௌசௌ, அழகனும் சரி அந்த பேரழகனும் சரி எல்லாருமே பிராடு பசங்க என சொல்கிறார். இதை கேட்டு கடுப்பான ஆனந்தி சாப்பிடாமல் அந்த இடத்தைவிட்டு செல்கிறார்.

ஆனந்தி, அன்புக்கு நடந்த கொடுமையை தட்டிக்கேட்க வேண்டும் என்று ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறது. அன்பு, ஆனந்தி, முத்து உள்ளிட்டோர் காவலுக்கு நிற்பவரை அழைத்து என்ன நடந்தது என விசாரணை மேற்கொள்கின்றனர்.

இறுதியாக மித்ரா, கருணாகரனை பழி வாங்க வேண்டும் என்பதற்காக அவர்களிடம் சிரித்து பேசி, போனை திருடிவிட்டார்கள். அப்போது தான் லிஃப்ட்டில் யாருக்கும் போன் செய்ய முடியாது என்பது இவர்களின் பிளான்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.