Singapenne: சபதம் எடுத்த அன்பு, ஆனந்தி.. வலையில் வந்து சிக்குவாரா கருணாகரன் - சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singapenne: சபதம் எடுத்த அன்பு, ஆனந்தி.. வலையில் வந்து சிக்குவாரா கருணாகரன் - சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ

Singapenne: சபதம் எடுத்த அன்பு, ஆனந்தி.. வலையில் வந்து சிக்குவாரா கருணாகரன் - சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ

Aarthi Balaji HT Tamil
Aug 02, 2024 09:54 AM IST

Singapenne: கருணாகரன் நாம் பேசுவதை பார்த்து கொண்டே இருக்கிறான் அதனால் அவன் தான் இது போன்ற செயல்களில் நம்மை மாட்டிவிட்டு இருக்க வேண்டும் என்ற சந்தேகம் ஆனந்திக்கு ஏற்படுகிறது. அதை அன்புவிடம் சொல்லுகிறார்.

வலையில் வந்து சிக்குவாரா கருணாகரன் - சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ
வலையில் வந்து சிக்குவாரா கருணாகரன் - சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ

குடும்ப கஷ்டத்தை போக்க சென்னை வருகிறாள் ஹீரோயின் ஆனந்தி. வழக்கம் போல் கிராமத்தில் இருந்து வேலைக்கு வரும் பெண் என்ன கஷ்டத்தை சந்திக்கிறாள் என்பதே கதை. ஆனந்தி வரும் கஷ்டங்களை எப்படி சமாளிக்கிறார் என்பதே சிங்கப்பெண்ணே கதை. தினமும் சன் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் சிங்கப்பெண்ணே சீரியலின் இன்றைய ( ஆகஸ்ட் 2 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இன்றைய ப்ரோமோ

கருணாகரன் நாம் பேசுவதை பார்த்து கொண்டே இருக்கிறான் அதனால் அவன் தான் இது போன்ற செயல்களில் நம்மை மாட்டிவிட்டு இருக்க வேண்டும் என்ற சந்தேகம் ஆனந்திக்கு ஏற்படுகிறது. அதை அன்புவிடம் சொல்லுகிறார்.

மறுபக்கம் சௌசௌ, அழகனும் சரி அந்த பேரழகனும் சரி எல்லாருமே பிராடு பசங்க என சொல்கிறார். அன்பு அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

ஆனந்தி, அன்புக்கு நடந்த கொடுமையை தட்டிக்கேட்க வேண்டும் என்று ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறது. அன்பு, ஆனந்தி, முத்து உள்ளிட்டோர் காவலுக்கு நிற்பவரை அழைத்து என்ன நடந்தது என விசாரணை மேற்கொள்கின்றனர்.

உடனே முத்து, என்ன செய்ய வேண்டும் என்று சொல்லு ஆனந்தி அதை நான் செய்து முடித்துவிடுகிறேன் என சொல்கிறார். அனைவரும் இணைந்து இதை எப்படியாவது முடித்து காட்ட வேண்டும் என்று சபதம் போடுவதும் ப்ரோமோ முடிந்தது.

நேற்றைய எபிசோட்டில் நடந்தது என்ன

தனக்கு நடக்கும் அனைத்து விஷயத்தையும் பார்த்து ஊருக்கு செல்கிறேன் என அழுத படி வார்டனிடம் சொல்கிறார் ஆனந்தி. அதற்கு அவர், “ போவதற்கு முன்பாக ஒரு விஷயத்தை மட்டும் செய்துவிட்டு போ” என சொல்கிறார்.

மறுபக்கம் முத்து, அன்புவிடம், “ ஆனந்தி பட்ட கஷ்டம் எல்லாமே போதும். நீ தான் அழகன் என்பதை அவளிடம் சொல்லி, கையை பிடித்து அழைத்து வா “ என சொல்கிறார். அன்புவிற்கு அந்த யோசனை சரி என தோன்றுகிறது.

ஆனந்தியிடம் உண்மையை சொல்ல போன அன்புவிடம், “ எனக்கு நடந்த சம்பவங்கள் பின்னால் யாருக்கு இருக்கிறார் என்று எனக்கு தெரிய வேண்டும் “ என உறுதியாக சொல்லிவிட்டார். காதலை சொல்ல போன அன்பு என்ன சொல்வது என தெரியாமல் நின்று கொண்டு இருந்தார். பிறகு அவர்கள் இருவரும் வேண்டும் என்றே திட்டம் தீட்டி கருணாகரன் முன்பாக சிரிந்து மகிழ்ச்சியாக இருப்பது போல் பேசி கோபப்படுத்தியது போல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.