Ethirneechal: முடிவுக்கு வரும் எதிர்நீச்சல்.. டிஆர்பிக்காக மாற்றப்பட்ட டாப் சீரியல் நேரம்!
Ethirneechal: இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடர் முடிவுக்கு வருவதால் டாப் சீரியலின் நேரம் மாற்றப்பட்டு உள்ளது.
Ethirneechal: வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சீரியல் தான். அதிலும் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் என்றால் அவ்வளவு இஷ்டம். காலை டிவி ஆன் செய்தால் இரவு வரை சன் தொலைக்காட்சியில் சீரியல் தான் ஓடும்.
பகல் சீரியல்களை விட இரவு சீரியல்
அதிலும் பகல் சீரியல்களை விட இரவு சீரியல்களுக்கு தான் மவுசு அதிகம். அப்படி மக்களின் மனதில் இடம் பிடித்த சீரியல் தான், எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை கிடைத்து வந்தது. இரவு 9 மணி வந்தால் உடனே பெண்கள் கண்டிப்பாக டிவி முன்பு அமர்ந்து இந்த சீரியல் பார்க்க அமர்ந்துவிடுகிறார்கள்.
குணசேகரன் இறப்பு
அதற்கு காரணம், அந்த சீரியலில் இடம் பெற்ற குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து. ஆம், அவரது கரடுமுரடான வில்லனிசம் ஏராளமானோரை இந்த சீரியலுக்கு அழைத்து வந்தது.
ஆனால் கடந்த வருடம் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட, சீரியலுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. சீரியல் கதை முழுவதுமாக மாறியது. அவர் பாத்திரத்தை நிரப்ப முடியாமல் போனது சீரியலின் டிஆர்பியில் கடும் அடியை சந்தித்து இருக்கிறது.
எதிர்நீச்சல்
தர்ஷினி கடத்தல் விஷயம் நடந்து முடிந்த பிறகு நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் எதிர்நீச்சல் சீரியல் சென்று கொண்டு இருந்தது.
தற்போது அண்ணை எதிர்த்து தம்பிகள் நிற்பதால் சற்று சீரியல் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. ஒட்டுமொத்த குடும்பமும் குணசேகரனுக்கு எதிராக நிற்கிறார்கள்.
ஞானம், கரிகாலனிடம் பணத்தை கொடுத்து புதிய தொழில் செய்வதாக சென்று ஏமாந்து இருக்கிறார். கதிரும் தனக்கு வரவேண்டிய காது குத்து மொய் எதுவும் வராததால் ஏமாற்றம் அடைந்து உள்ளார்.
குணசேகரன் கைது
எதிர்நீச்சல், சீரியலில் யாரும் எதிர்பார்க்காத விதமாக குணசேகரன் கைது செய்யப்பட்டார். கொலை, தர்ஷினியை கடத்தி வைத்தது என அனைத்துமே தெரியவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து டிஆர்பி குறைந்து வருவதால் எதிர்நீச்சல் சீரியலை முடிவுக்கு கொண்டு வர குழு முடிவு செய்துவிட்டது. ஆம்.. இறுதிகட்டத்தில் இருக்கிறது, எதிர்நீச்சல் சீரியல். இறுதியில் குணசேகரன் மனம் மாறுமா அல்லது பெண்கள் சாதித்து வெளியேறுவார்களா என்பது பற்றி தெரியவில்லை. இதனால் அடுத்து கதைகளம் எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
சிங்கப்பெண்ணே
கிராமத்தில் மகிழ்ச்சியாக இருந்த பெண், குடும்ப கஷ்டத்தை போக்க சென்னை வருகிறாள் ஆனந்தி. வேலைக்கு வந்த ஒரு பெண்ணின் கதை என்னவாகிறது என்பதே சிங்கப்பெண்ணே கதை. சமீபத்தில் தொடங்கிய இந்த தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரின் நேரம் தற்போது மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி சிங்கப்பெண்ணே சீரியல் இனிமேல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்