Sikka: ‘சிறையில் பிக்பாஸ் பார்க்கும் ரவுடிபேபி சூர்யா’ -உண்மையை உளறிய சிக்கா!
Rowdybaby Surya watching Bigg Boss in jail: ‘ஜி.பி.முத்து பிக்பாஸ் போனது, வந்தது, எல்லா வீடியோவையும், சூர்யா மொபைல் போனில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார். ஜி.பி.முத்துவை ஒழுங்காக யூஸ் பண்ணிக்கவில்லை என்று ரவுடிபேபி சூர்யா வருத்தப்பட்டார்’ -சிக்கா
யூடியூப்பில் ஆபாச வீடியோக்கள் வெளியிட்டதாக எழுந்த புகாரில், முன்னாள் டிக்டாக் பிரபலங்கள் ரவுடிபேபி சூர்யா மற்றும் அவருடன் நெருக்கமாக வாழ்ந்து வந்த சிக்கா என்கிற சிக்கந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 9 மாத சிறை தண்டனை முடித்து சிக்கா வெளியே வந்த நிலையில், சூர்யா தேவி இன்னும் சிறையில் உள்ளார். இந்நிலையில் இணையதளம் ஒன்றுக்கு சிக்கா பேட்டியளித்தார். அதில், சிறையில் ரவுடிபேபி சூர்யா, பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதாக கூறி அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இதோ அந்த பேட்டி:
‘‘என்னை கேட்டால், ரவுடிபேபி சூர்யாவை நான் இரும்பு பெண்மணி என்று தான் கூறுவேன். அவங்க விசயத்தில், இப்போது வரை உறுதியாக இருக்கிறார். என்னதான் கஷ்டம், துன்பம், துயரம் வந்தாலும் எல்லா வலியையும் தாங்கிக் கொண்டு, இன்று வரை உறுதியாக இருக்கிறார்.
இது சூர்யாவால் மட்டுமே முடியும். இதே இடத்தில் வேறு யாராவது இருந்தால், இந்நேரம் துவண்டு போயிருப்பார்கள். ஆனால், அவர் இன்னும், தெம்பாக, நீ இருக்க, நான் இருப்பேன், நான் வெளியே வந்ததும் நாம சாதித்து காட்டுவோம் என்று உறுதியோடு இருக்கிறார். இதே மீடியாவில் எனக்கு எவ்வளவு கெட்ட பெயர் இருந்ததோ, எல்லாவற்றையும் மாற்றி, நல்ல பெயரை கொண்டு வருவேன் என உறுதியோடு இருக்கிறார்.
என்னாலும் நின்று காட்ட முடியும், நான் ஜெயிப்பேன் அப்படினு சூர்யா சொல்கிறார். ஜி.பி.முத்து வீடியோவை அவங்களும் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார். ஜி.பி.முத்து பிக்பாஸ் போனது, வந்தது, எல்லா வீடியோவையும் அவர் மொபைல் போனில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார். ஜி.பி.முத்துவை ஒழுங்காக யூஸ் பண்ணிக்கவில்லை என்று ரவுடிபேபி சூர்யா வருத்தப்பட்டார்.
பிக்பாஸ் முழுக்க அவர் இருந்திருக்கலாம். ஏன், என் மாமா இப்படி பண்ணான் என்று கோபித்துக் கொண்டார். ஜி.பி.முத்துவை மாமா என்று தான் அழைப்பார். லூசு மாமா ஏன் இப்படி பண்ணுச்சு என்று வருந்தினார். நானாக இருந்தால் 100 நாள் இருந்திருப்பேன் என்றார்.
ஜி.பி.முத்துவிடம் எனக்கு ஒரு வருத்தம் உள்ளது. சூர்யாவை வைத்து அவர் நிறைய வளர்ந்திருக்கிறார். ரவுடிபேபி சூர்யா பெயரை அவர் நிறைய பயன்படுத்தியிருக்கிறார். பேப்பர் ஐடி எப்படி அவரை வளர்த்தார்களாே, அதே போல் தான் ரவுடிபேபி சூர்யாவும் அவரது வளர்ச்சிக்கு ஒரு காரணம். ஆனால், இப்போ அவர் பெரிய இடத்தில் இருக்கிறார்.
ஆனால், இப்போது ஒரு நாளாவது வந்து சூர்யாவை ஜி.பி.முத்து சந்தித்திருக்கலாம். சரி, சூர்யாவை சந்தித்தால் குடும்பத்தில் பிரச்னை வரும் என்று நீங்கள் நினைத்தால், சூர்யா குழந்தைகளுக்கு ஏதாவது பண்ணிருக்கலாமே?
எனக்கு தெரிந்தே ஜி.பி.முத்துவுக்கு நிறைய பண உதவியை சூர்யா செய்திருக்கிறார். அவர் கஷ்டப்படும் போது உதவியதற்கு, 10 சதவீதமாவது உதவியிருக்கலாம். அதனால், அவருக்கு எந்த கெட்டப்பெயரும் வராது. சன்னிலியோன் உடன் ஜி.பி.முத்து பங்கேற்ற நிகழ்ச்சியில், ‘உங்களுடன் யார் ஜோடியாக நடிக்கலாம்’ என கேள்வி கேட்ட போது, கூட்டத்திலிருந்து வந்த குரல், ரவுடிபேபி சூர்யா என்று தான். ஆனால் ஜி.பி.முத்து வாயில் அதை சொல்லவில்லை. சூர்யா வெளியே வந்து ஜி.பி.முத்துவிடம் நிறைய கேள்வியை வைப்பார்,’’
என்று அந்த பேட்டியில் சிக்கா கூறியுள்ளார்.