Siddharth Shares Aditi Photo: அதிதியுடன் நெருக்கமாக இருக்கும் சித்தார்த்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Siddharth Shares Aditi Photo: அதிதியுடன் நெருக்கமாக இருக்கும் சித்தார்த்

Siddharth Shares Aditi Photo: அதிதியுடன் நெருக்கமாக இருக்கும் சித்தார்த்

Aarthi V HT Tamil
Oct 29, 2022 09:33 AM IST

சித்தார்த், அதிதி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

சித்தார்த், அதிதி
சித்தார்த், அதிதி

நடிகை அதிதி ராவ் ஹைதாரி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

அந்த வகையில் சித்தார்த், அதிதியுடன் எடுத்த ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த படத்தில் இருவரும் மிக நெருக்கமாக இருப்பது போல் தெரிகிறது. "இதய இளவரசி" என்ற தலைப்பையும் போட்டுள்ளார்.

“இதய இளவரசி அதிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவை பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, அவை நிறைவேறும் என்று நம்புகிறேன். சூரியனை இன்னும் நீங்கள் நிறைய சுற்றி வர வேண்டும்” எனக் குறிப்பிட்டு உள்ளார். 

முன்னதாக, பாலிவுட் நடிகை சோஹா அலி கான், சமந்தா உள்ளிட்டோரை சித்தார்த் காதலித்ததாக செய்தி வெளியானது. இறுதியாக சித்தார்த் அதிதி ராவ் ஹைடாரியை காதலித்ததாக தெரிகிறது. 

விரைவில் அவர்கள் இதை அறிவிப்பார்கள் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  ந்ர்யும் மகா சமுத்ரம் படத்தில் இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.