Siddharth: ‘கமிட்மென்ட்ல மாட்டிக்கிட்டேன்’ - இந்தியன் 2 ஆடியோ லான்சில் கலந்து கொள்ள முடியாதது ஏன்? - சித்தார்த்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Siddharth: ‘கமிட்மென்ட்ல மாட்டிக்கிட்டேன்’ - இந்தியன் 2 ஆடியோ லான்சில் கலந்து கொள்ள முடியாதது ஏன்? - சித்தார்த்!

Siddharth: ‘கமிட்மென்ட்ல மாட்டிக்கிட்டேன்’ - இந்தியன் 2 ஆடியோ லான்சில் கலந்து கொள்ள முடியாதது ஏன்? - சித்தார்த்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 01, 2024 08:18 PM IST

Siddharth: “'இந்தியன்2' திரைப்படம் எனது கரியரில் மிகச்சிறந்த படமாக இருக்கும். இந்த விலைமதிப்பற்ற வாய்ப்பை எனக்கு வழங்கிய லைகா புரொடக்ஷன்ஸ், இயக்குநர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு நன்றி.” -சித்தார்த்

Siddharth: ‘கமிட்மென்ட்ல மாட்டிக்கிட்டேன்’ - இந்தியன் 2 ஆடியோ லான்சில் கலந்து கொள்ள முடியாதது ஏன்? - சித்தார்த்!
Siddharth: ‘கமிட்மென்ட்ல மாட்டிக்கிட்டேன்’ - இந்தியன் 2 ஆடியோ லான்சில் கலந்து கொள்ள முடியாதது ஏன்? - சித்தார்த்!

இந்த கெளரவம் குறித்து நடிகர் சித்தார்த் கூறும்போது, ​​“எங்களின் கடின உழைப்பை பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறையினர் அங்கீகரிப்பதைப் பார்க்கும்போது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு பத்திரிக்கையாக விகடன் அதன் நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளது. இதுமட்டுமல்லாது, திரைப்படம் மற்றும் சின்னத்திரை தயாரிப்பிலும் வெற்றிகரமாக பல விஷயங்களை செய்து ரசிகர்களின் மனதை வென்றுள்ளது. 

விகடனின் அங்கீகாரமும் அதன் நடுநிலையான விமர்சனமும், பல திரைப்படங்களுக்கு தூணாகவும் முதுகெலும்பாகவும் இருந்து வருகிறது. இவை அனைத்தும் அந்தப் படத்தின் மதிப்பையும் உயர்த்துகிறது. ஒரு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் ‘சித்தா’ திரைப்படம் விகடனில் இருந்து மிகப் பெரிய கெளரவத்தைப் பெறுவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.

இந்தியன் 2 கலந்து கொள்ள முடியவில்லை 

மேலும், நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து 'இந்தியன்2' படத்தில் திரையை பகிர்ந்து கொள்வது குறித்து கேள்வி எழுப்பியபோது, "நான் ஒரு நடிகனாக வருவதற்கு முன்னால் உதவி இயக்குநராகதான் என் பயணத்தைத் தொடங்கினேன். கமல்ஹாசன் எனக்கு குருவாகவும், வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார். 

அவருடன் பணிபுரியும் போது அவரிடம் இருந்து நுணுக்கங்களையும் அவரது பன்முகத்தன்மையையும் கற்றுக்கொண்டது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தின் ஒவ்வொரு புரோமோஷனிலும் நானும் இருக்க விரும்பினேன். ஆனால், முந்தைய கமிட்மென்ட் காரணமாக 'இந்தியன் 2' ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போவது எனக்கு வருத்தம்தான். 

'இந்தியன்2' திரைப்படம் எனது கரியரில் மிகச்சிறந்த படமாக இருக்கும். இந்த விலைமதிப்பற்ற வாய்ப்பை எனக்கு வழங்கிய லைகா புரொடக்ஷன்ஸ், இயக்குநர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு நன்றி. திரையரங்குகளில் பார்வையாளர்களுடன் சேர்ந்து நானும் படம் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்" என்றார்.

முன்னதாக, ‘பண்ணையாரும் பத்மினியும்’ ‘சேதுபதி’ ‘சிந்துபாத்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் அருண்குமார். இவரது இயக்கத்தில், நடிகர் சித்தார்த் நடிப்பில் அண்மையில் வெளியாகி, மக்களிடையே வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் ‘சித்தா’.

இந்தப்படத்தில், அண்ணன் இறந்த பிறகு அண்ணியையும்,அவரது பெண் குழந்தையையும் பாதுகாக்கும் கொழுந்தன், கதாபாத்திரத்தில் நடிகர் சித்தார்த் நடித்திருக்கிறார். பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமை குறித்து இந்தப்படம் பேசியது.  இந்தப்படத்தில் நடித்ததோடு அந்தப்படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார் நடிகர் சித்தார்த். சுமார் ரூ.3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சித்தா திரைப்படம் பல கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: