தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Siddharth: ‘சித்தா’ கொடுத்த பம்பர் ஹிட்; சிவகார்த்தியேனின் நெருக்கமானவருக்கு டேட் கொடுத்த சித்தார்த்! - அறிவிப்பு உள்ளே!

Siddharth: ‘சித்தா’ கொடுத்த பம்பர் ஹிட்; சிவகார்த்தியேனின் நெருக்கமானவருக்கு டேட் கொடுத்த சித்தார்த்! - அறிவிப்பு உள்ளே!

Kalyani Pandiyan S HT Tamil
May 18, 2024 12:45 PM IST

Siddharth: சித்தார்த் அடுத்ததாக ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘குருதி ஆட்டம்’ ஆகிய திரைப்படங்களை இயக்கி பிரபலமான, இயக்குநர் ஸ்ரீ கணேஷ் உடன் இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Siddharth: ‘சித்தா’ கொடுத்த பம்பர் ஹிட்; சிவகார்த்தியேனின் நெருக்கமானவருக்கு டேட்  கொடுத்த சித்தார்த்! - அறிவிப்பு உள்ளே!
Siddharth: ‘சித்தா’ கொடுத்த பம்பர் ஹிட்; சிவகார்த்தியேனின் நெருக்கமானவருக்கு டேட் கொடுத்த சித்தார்த்! - அறிவிப்பு உள்ளே!

ட்ரெண்டிங் செய்திகள்

அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள்:

 

அதே போல தயாரிப்பாளராக இருந்து இயக்குநராக மாறியிருக்கும் சசி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘டெஸ்ட்’ திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் மாதவன், நயன் தாரா உள்ளிடோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது சித்தார்த் அடுத்தப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

அதன்படி, சித்தார்த் அடுத்ததாக ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘குருதி ஆட்டம்’ ஆகிய திரைப்படங்களை இயக்கி பிரபலமான, இயக்குநர் ஸ்ரீ கணேஷ் உடன் இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தப்படத்தை சிவகார்த்திகேயேன் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘மாவீரன்’ படத்தை தயாரித்த அருண் விஷ்வா தன்னுடைய சாந்தி டாக்கீஸ் பேனரில் தயாரிக்கிறார்.

இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிவிப்பில், “இந்தக்கதை எல்லைகளை கடந்த, உலகளாவிய கதைகளில் ஒன்றாக இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

சித்தார்த் - அதிதி ராவ் காதல்

முன்னதாக, தமிழ், தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் சித்தார்த். அதேபோல் பாலிவுட் நடிகையாக இருந்து வந்த அதிதி ராவ், தமிழில் மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையடுத்து, சித்தார்த் அதிதி ராவ் இடையே அறிமுகம் ஏற்பட்ட நிலையில், இருவரும் நட்பாக பழகி வந்தனர்.பின்னர் இருவரும் நெருக்கமாக இருந்த நிலையில், ஒன்றாகவும் ஊர் சுற்றியும் வந்தனர். நாளடைவில் பழக்கம் அதிகமாக, ரீல்ஸ் விடியோ பகிர்வது முதல் பார்டி, பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக வருவது என இருவரும் காதல் புறாக்களாக வலம் வந்தனர்.

மறுப்பு தெரிவித்த சித்தார்த் 

இதனையடுத்து சித்தார்த், அதிதிராவ் ஆகிய இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுதொடர்பாக இருவருமே வாய் திறக்காமல் இருந்து வந்தனர். ஆனாலும் இவர்கள் தொடர்பான செய்திகள் அவ்வப்போது மீடியாக்களில் உலா வந்த வண்ணம் இருந்தன.  

இந்த நிலையில் அண்மையில் இருவருக்கும் கல்யாணம் முடிந்து விட்டதாக தகவல் வெளியானது. அதனை மறுக்கும் விதமாக நடிகர் சித்தார்த், “ “ அவள் ஆம் என்று சொல்லி விட்டாள்.. எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து விட்டது” என்று பதிவிட்டார். அதன் வாயிலாக இருவருக்கும் நிச்சயம் மட்டுமே நடந்து முடிந்திருந்தது தெரிய வந்தது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்