Siddharth: ’நிர்வாணமாக விழுந்துட்டேன்.. நகுல் அதிகப்பிரசங்கி என்ன சாவடிக்க பாத்தான்’- சித்தார்த்
நடிகர் சித்தார்த், பாய்ஸ் படத்தில் நடித்த போது படப்பிடிப்பில் தளத்தில் ஏற்பட்ட அனுபவம் குறித்து பேட்டி அளித்து உள்ளார்.
சென்னையில் பிறந்து வளர்ந்து மும்பையில் எம்.பி.ஏ பட்டம் பெற்றவர் சித்தார்த. இவர் நடிப்பு மட்டுமின்றி, திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்கிறார். இவர் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் பணியாற்றினார்.
ஷங்கர் இயக்கத்தில் அவரது பிரம்மாண்ட முத்திரையுடன் 2003-ல் வெளியானது பாய்ஸ். இந்நிலையில் சமீபத்தில் சித்தார்த் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அந்த பேட்டியில் பாய்ஸ் திரைப்படத்தில் ஆடை இல்லாமல் மவுண்ட் ரோடில் ஓடும் காட்சியை படமாக்கப்பட்டது குறித்து பேசி இருந்தார்.
அவர் பேசுகையில், “பாய்ஸ் படத்தில் நான் நடித்த போது எனக்கு 24 வயது தான் ஆனாது. மவுண்ட் ரோட்டில் சின்ன வயதிலிருந்து வளர்ந்தேன். அந்த ரோட்டில் தான் நான் நிர்வாணமாக ஓடப்போகிறேன் என சின்ன வயதிலேயே யாராவது சொல்லி இருந்தால் பைத்தியமா நீங்க என்று கேட்டு இருப்பேன்.
அந்த சீன் நேற்று எடுத்தது போல் இருக்கிறது. நான் அந்த சீன்காக இரண்டு ஜட்டி போட்டு இருந்தேன். இது எல்லாமே தொழில்நுட்ப ரகசியங்கள். உங்களுக்காகச் சொல்கிறேன்.
ரோட்டில் நிர்வாணமாக நான் ஓடும் காட்சியை 8 நாள் இரவு முழுவதும் எடுத்தோம்.
அந்த காட்சியில் நான் நகுலுடன் பைக்கில் செல்ல வேண்டும். அப்போது நிர்வாணமாக இருக்கிறேன். பைக்கில் போகும் போது என் தலைக்கு மேல் ஆட்டோ பறக்க வேண்டும் இது தான் அந்த சீன். நான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதால் எனக்கும், அட்டோவிற்கு 3 அடி இடைவேளை இருந்தது. ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டது அப்போது நகுல் அதிகப்பிரசங்கி ஆர்வம் ஆகிவிட்டது. ரொம்ப குழந்தை அந்த சமயத்தில்.
இரண்டாவது கியரில் சென்று அந்த இடத்தில் சேர்த்துவிடு என சொல்கிறேன். ஆனால் என் பேச்சை கேட்காமல் முதல் கியர் போட்டு வண்டி நின்றுவிட்டது. அந்த நேரம் அங்கிருந்து அட்டோ வருகிறது.
அப்போது அவனைத் திருப்பிவிட்டு நானும் திரும்பும் போது அந்த ஆட்டோவின் டயர் என் முதுகில் தொட்டு, தோல் போய்விட்டது. அவன் தான் இதற்கு காரணம்” என்றார்.
20 கிலோ மிட்டர் மேல் போக வேண்டாம் என சொன்னால் கேட்காமல் 60 கிலோ மிட்டர் வேகத்தில் சென்றான். அதனால் வண்டி ஸ்கிட் ஆகிவிட்டது. வண்டி அடியில் என் கால் மாட்டிக்கொண்டது. அவனாவது ஆடை அணிந்து இருக்கிறான். என்னை நிர்வாணமாக மருத்துவமனை அழைத்துச் சென்றார்கள். இன்னும் வரை அந்த தழும்பு என் காலில் இருக்கிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்