Siddha Movie Hit: பணமுதலைகளுடன் போட்டியிட்ட சித்தா.. படுஜோர் வெற்றி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Siddha Movie Hit: பணமுதலைகளுடன் போட்டியிட்ட சித்தா.. படுஜோர் வெற்றி!

Siddha Movie Hit: பணமுதலைகளுடன் போட்டியிட்ட சித்தா.. படுஜோர் வெற்றி!

Marimuthu M HT Tamil
Oct 03, 2023 08:30 PM IST

பணமுதலைகளுடன் போட்டியிட்ட சித்தா திரைப்படம், பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

சித்தா திரைப்படம் பெரு வெற்றி
சித்தா திரைப்படம் பெரு வெற்றி

இதில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த சந்திரமுகி 2க்கு படத்தின் பட்ஜெட்டுக்கு நிகராகப் புரோமோஷன் செய்யப்பட்டது. இறைவன் படமும் ஜெயம் ரவி, நயன்தாரா என்னும் உச்ச நட்சத்திரத்தின் நடிப்பில் வந்ததால் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவை வெளியான சில நாட்களிலேயே கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இருப்பினும், சந்திரமுகி 2 படம் ஆவரேஜாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இறைவன் திரைப்படத்தைப் பல திரையரங்குகளில் தூக்கத்தொடங்கி விட்டனர்.

இந்நிலையில் இந்த ரேஸில் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகியப் படங்களை இயக்கிய எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவான சித்தா படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்குக் காரணம், இப்படத்தின் கதை தான்.

இப்படத்தின் ஒன்லைன் என்னவென்றால், அண்ணன் இறந்த பிறகு அண்ணியையும் அவரது பெண் குழந்தையையும் பாதுகாக்கும் கொழுந்தன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ளார். அதில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமை குறித்தும் மிக ஸ்ட்ராங்கான மெசேஜ் இருந்தது. இக்கதை பெரும்பாலான விமர்சகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

அவர்கள் இப்படத்தைக் குறித்து எழுதிய எழுத்தும், படம் பார்த்தவர்கள் கூறிய மவுத் டாக் ரிசல்டும் படத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியுள்ளன. இதனால் அடுத்த வாரத்துக்கு சித்தா படத்துக்கு ஸ்கீரின்கள் அதிகரிக்கப்படும் எனத் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் ரூ.3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சித்தா திரைப்படம், 5 நாட்களில் சுமார் 13 கோடி வசூலித்துள்ளதாக கோலிவுட்டில் பேசத் தொடங்கியுள்ளனர்.

அண்மையில் நடிகர் விஷால் சிறிய பட்ஜெட் படங்களைத் தயாரிப்பாளர்கள் எடுக்க வேண்டாம் என்ற நிலையில், பணமுதலைகளுடன் போட்டியிட்ட குறைந்த பட்ஜெட் படமான சித்தா நான்கு மடங்கு வெற்றியினைப் பெற்றுள்ளது.

சமீபத்தில் கர்நாடகாவில் இப்படத்தின் புரோமோஷனுக்காக சென்ற நடிகர் சித்தார்த் துரத்தியடிக்கப்பட்ட செய்தியும், அதன் தொடர்ச்சியாக வெளிவந்த செய்திகளும் இப்படத்துக்குக் கூடுதல் விளம்பரத்தை இந்திய அளவில் பெற்றுத்தந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.