Shanthi Williams: பேசுனாலே அடிதான்.. நரகவாழ்க்கை.. சிகரெட், பியர்னா உசுரு’ - கணவர் குறித்து சாந்தி உருக்கம்!-shanthi williams latest emotional interview about her husband cameraman williams - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shanthi Williams: பேசுனாலே அடிதான்.. நரகவாழ்க்கை.. சிகரெட், பியர்னா உசுரு’ - கணவர் குறித்து சாந்தி உருக்கம்!

Shanthi Williams: பேசுனாலே அடிதான்.. நரகவாழ்க்கை.. சிகரெட், பியர்னா உசுரு’ - கணவர் குறித்து சாந்தி உருக்கம்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 03, 2024 07:30 AM IST

Shanthi Williams: அண்மையில் தான் அவரது பிறந்த நாளை கொண்டாடினோம். அப்போது அவருக்கு பிடித்த சிகரெட், பியர் ஸ்வீட்ஸ் உள்ளிட்ட எல்லாவற்றையும் வைத்து படைத்து கும்பிட்டுவிட்டு தான் வந்தோம் - சாந்தி உருக்கம்!

Shanthi Williams: பேசுனாலே அடிதான்.. நரகவாழ்க்கை.. சிகரெட், பியர்னா உசுரு’ - கணவர் குறித்து சாந்தி உருக்கம்!
Shanthi Williams: பேசுனாலே அடிதான்.. நரகவாழ்க்கை.. சிகரெட், பியர்னா உசுரு’ - கணவர் குறித்து சாந்தி உருக்கம்!

வில்லியம்ஸ்
வில்லியம்ஸ்

இது குறித்து ஆகாயம் யூடியூப் சேனலுக்கு பேசிய அவர், “என்னைப் பார்த்து பயந்து ஓடியவர்கள் எப்படி என்னிடம் வருவார்கள். நான் உன்னிடம் வரவில்லை, நீ (மோகன்லால்) பயணம் செய்த அதே கோச்சில், நானும் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய லெவலும் கிட்டத்தட்ட உன்னுடைய இடத்திற்கு வந்துவிட்டது. அப்படி இருக்கையில், நீ என்னை பார்த்து பயந்து ஓட வேண்டிய அவசியம் என்ன...? அதுதான் எனக்கு மோகன்லால் மீது ஏற்பட்ட கோபம். என்னை பார்த்து நன்றாக இருக்கிறீர்களா என்று கேட்டால்தான் என்ன?

பத்து பைசாக்கு பிரயோஜனம்

எனக்கு அவர்களால் பத்து பைசாவுக்கு பிரயோஜனமும் கிடையாது. எனக்கும் அவர்களுக்கும் வேறு எந்த பிரச்சினையும் கிடையாது. நான் நான்கு குழந்தைகளை திருமணம் செய்து வைத்திருக்கிறேன். அவர்கள் நன்றாக இருக்கிறார்கள். பேரக்குழந்தைகளோடு நான் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

சாந்தி வில்லியம்ஸ்
சாந்தி வில்லியம்ஸ்

மற்றவையெல்லாம் குப்பை, அவற்றை குப்பைத் தொட்டியில் தான் போட வேண்டும். மோகன்லாலை நான் அப்படி பேசிய பொழுது, பலரும், அவர் உங்களை ஆளை வைத்து அடிக்க போகிறார். கேரளா சென்றால், அவரது வெறி கொண்ட ரசிகர்கள் உங்களை சும்மா விட மாட்டார்கள் என்றெல்லாம் கூறினார்கள்.

உயிருக்கு பயந்தால் இங்கு வாழ முடியாது.

உயிருக்கு பயந்தால் இங்கு வாழ முடியாது. என்னை அடிக்கத்தானே செய்வார்கள். அடித்து விட்டுப் போகட்டும். நான் ஒரு பார்வை பார்த்தாலே, என்னை அடிக்க வந்தவன் திரும்பி போய் விடுவான். எனக்கு அந்த ஒரு பார்வை போதும். உண்மையிலே எனக்கு பயம் கிடையாது. காரணம் என்னவென்றால் எனது பெயருக்கு பின்னால் என் கணவர் வில்லியம்ஸ் பெயர் இருக்கிறது. ஜோசியர் கூட சொன்னார் அதில் கேது இருக்கிறது அந்த பெயரை தூக்கி விடுங்கள் என்று..

ஆனால், என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று நான் அவருடைய பெயரை வைத்திருக்கிறேன். காரணம் என்னவென்றால் எனக்கு கடவுள் சக்தி மிக மிக அதிகம். ஆரம்ப காலத்தில் அவர் என்னை அடித்து துன்புறுத்து இருக்கிறார். நடிக்க கூடாது என்று சொல்லி இருக்கிறார். அதனால், நான் நடிக்காமல் இருந்திருக்கிறேன். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பொழுது சோபாவில் மிதித்துத் தள்ளி, என்னை மல்லாக்க சாய்த்திருக்கிறார் ஆனால், அவரிடம் நல்ல குணமும் இருந்தது.

ஓடி வருவார்

நான் வருத்தப்பட்டு உட்கார்ந்திருந்தால் அவருக்கு தெரிந்து விடும் எங்கிருந்தாலும் என்னை தேடி ஓடி வந்து விடுவார். அவர் என்னிடம் கடைசியாக சொன்னது, என் உயிர் உன்னிடம் வந்து தான் செல்லும் என்பது. அவர் இறக்கும் பொழுது, என் மீது விழுந்து தான் அவர் உயிர் சென்றது. நான் ஏதாவது நினைத்து அழுது கொண்டு உட்கார்ந்திருக்கும் பொழுது, அவரது வாசம் என்னை தேடி வருவதை நான் உணர்ந்திருக்கிறேன். அண்மையில் தான் அவரது பிறந்த நாளை கொண்டாடினோம். அப்போது அவருக்கு பிடித்த சிகரெட், பியர் ஸ்வீட்ஸ் உள்ளிட்ட எல்லாவற்றையும் வைத்து படைத்து கும்பிட்டுவிட்டு தான் வந்தோம்” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.