தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Shalini Thanks Edappadi Palanisami For Ajiths Health In X Post And Emoji

Shalini AjithKumar: அஜித்தின் உடல்நிலை: ஈபிஎஸ் போட்ட எக்ஸ் இடுகை - எமோஜியில் நன்றி சொன்ன ஷாலினி

Marimuthu M HT Tamil
Mar 08, 2024 09:20 PM IST

Shalini AjithKumar Thanks to Edappadi Palanisami: அஜித்தின் உடல்நிலை குறித்து எடப்பாடி பழனிசாமி போட்ட எக்ஸ் தளப் பதிவுக்கு, ஷாலினி அஜித் குமார் சொன்ன சமிக்ஞை வைரல் ஆகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் எக்ஸ் டிவிட்டுக்கு ஷாலினி அஜித்குமார் பதில்
எடப்பாடி பழனிசாமியின் எக்ஸ் டிவிட்டுக்கு ஷாலினி அஜித்குமார் பதில்

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகர் அஜித் குமார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்றைய தினம் (07-03-2024) அனுமதிக்கப்பட்டார்.

நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் சிறிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டதாகவும்; அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதற்காக நிபுணத்துவம் பெற்ற சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

மதுரை, கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை வந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும், அவரது மூளையில் இருந்ததாக கூறப்பட்ட கட்டி அகற்றப்பட்டதாக கூறப்பட்டது. இது உலகம் முழுக்க இருந்த அஜித் ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியது. 

இந்த நிலையில் அஜித்தின் உடல் நலம் குறித்து விளக்கம் அளித்துள்ள அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா, ‘’அஜித்திற்கு மூளையில் கட்டி என்ற செய்தியெல்லாம் உண்மை இல்லை. வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது காதுக்கு கீழே நரம்பு வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து அரைமணி நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இன்று இரவோ அல்லது நாளையோ அஜித் வீடு திரும்புவார்’’ என சுரேஷ் சந்திரா கூறி உள்ளார்.

இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் பூரண உடல்நலம் பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் சமூகவலைத்தளத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ள இடுகையில், ‘’மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நடிகர் அஜித்குமார் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதற்கு ஷாலினி அஜித்குமார், எக்ஸ் தளத்தில், எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு ரியாக்ட் செய்யும் வகையில், வணக்கம் போன்ற எமோஜியை வைத்தார். 

அதனைக் கண்ட நெட்டிசன்களில் ஒருவர், ‘’இறைவன் துணை உங்களுக்கு எப்போதும் உண்டு’’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்னொரு நெட்டிசன் ஒருவர் கூறும்போது, ‘’கடந்து வந்த கடினங்கள் அதிகம். ஆனாலும் வென்று நின்றீர்கள். இனியும் எத்தனை கடினங்கள் வந்தாலும் வெல்வீர்கள். உடல் நலம் பெற்று திரும்ப என் வேண்டுதல்கள் அஜித் சார்’’ எனக் கூறியுள்ளார்.

மேலும் மற்றொரு நெட்டிசன் கூறுகையில், ''விரைவில் நலம்பெறுவீர்கள் தல’’ எனப் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சமுத்திரக்கனி, ''மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகோதரர் அஜித்குமார் அவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்'' என்றார்.

அதேபோல், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நடிகர் அஜித் குமார் நலம்பெற தெரிவித்துள்ளதாவது ‘’ திரு அஜித்குமார் அவர்கள் விரைவில் குணமடைய எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

உங்கள் ஆரோக்கியத்தை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள், விரைவில் உங்களுக்குப் பிடித்தமான செயல்களைச் செய்யத் திரும்புவீர்கள் என்று நம்புகிறேன்’’ என்று குறிப்பிட்டிருந்தார். 

மேலும் தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி அஜித்தின் உடல்நலம் பெற வெளியிட்ட எக்ஸ் இடுகையில், ‘’கடந்து வந்த கடினங்கள் அதிகம். ஆனாலும் வென்று நின்றீர்கள். இனியும் எத்தனை கடினங்கள் வந்தாலும் வெல்வீர்கள். உடல் நலம் பெற்று திரும்ப என் வேண்டுதல்கள் அஜித் சார்’’ எனப் பதிவிட்டுள்ளார். 

அதனைத்தொடர்ந்து நடிகை ஷாலினி அஜித் குமார், ‘தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்’’ எனப் பதிவிட்டுள்ளார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்