Shakila Vs Raadhika: ‘கேரவன்ல கேமரா வச்சாங்களாமே; விளம்பரத்துக்காக செக்ஸ் டார்ச்சர் ’ - ராதிகாவை வெளுத்த ஷகிலா!
Shakila Vs Raadhika: அப்படியானால் அது முடிந்து போன கதை. நீங்கள் அப்போது தயாரிப்பு தரப்பிடம் இதுபோன்று நடக்கிறது. இதை பார்த்துக் கொள்ளுங்கள் என்று அட்வைஸ் செய்து இருந்தால் போதும், நீங்கள் ஒருவர் அது போன்று நின்று இருந்தால் போதும், நாங்கள் உங்களுடன் வந்து நின்றிருப்போம். -ஷகிலா

Shakila Vs Raadhika: ‘கேரவன்ல கேமரா வச்சாங்களாமே; விளம்பரத்துக்காக செக்ஸ் டார்ச்சர் ’ - ராதிகாவை வெளுத்த ஷகிலா!
ராதிகா மலையாள படப்பிடிப்பில் இருந்த போது, கேரவனில் கேமரா வைத்ததாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்தார். அந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு நடிகை ஷகிலா பதிலடி கொடுத்திருக்கிறார்.
இப்போது ஏன் சொல்கிறீர்கள்
இது குறித்து அவர் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “வனிதா விஜயகுமார், ராதிகா அளித்த பேட்டியை எனக்கு அனுப்பி நான் கஷ்டப்பட்ட போதெல்லாம், எந்த காலகட்டத்திலும் இவர் எனக்கு உதவிகரமாக நிற்கவில்லை. இப்போது வந்து இவர் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்” என்று கூறினார்.