Shakeela: 'என் உடம்பு நான் காட்டுறேன், உங்களுக்கு என்ன பிரச்னை' - ஷகிலா ஆவேசம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shakeela: 'என் உடம்பு நான் காட்டுறேன், உங்களுக்கு என்ன பிரச்னை' - ஷகிலா ஆவேசம்

Shakeela: 'என் உடம்பு நான் காட்டுறேன், உங்களுக்கு என்ன பிரச்னை' - ஷகிலா ஆவேசம்

Aarthi V HT Tamil
May 15, 2023 06:40 AM IST

நடிகை ஷகிலா முன்பு பேட்டி அளித்திருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிறது.

ஷகிலா
ஷகிலா

அதில், "நான் மலையாளத்தில் 2026 ஆம் ஆண்டு அதுபோன்ற படங்களில் நடிக்க மாட்டேன் என்று தான் சொன்னேன். ஆனால் பலரும் நான் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொன்னதாக நினைத்துக் கொண்டார்கள். அதை இப்போது தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை.

அதற்குப் பிறகு நான்கு வருடங்கள் படம் இல்லாமல் சும்மா தான் இருந்தேன். அந்த காலத்தில் ஏற்கனவே நான் சம்பாதித்து வைத்திருந்த பணம் இருந்ததால் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டேன். அதற்குப் பிறகு தெலுங்கில் இருந்து ஜெயம் படத்திற்காக இயக்குநர் என்னை தொடர்பு கொண்டார்.

என்னிடம் இப்போது சொத்து என்று எதுவும் இல்லை கடவுள் மட்டும் தான் இருக்கிறார். ஏன் உடம்பு நான் காட்டுகிறேன். அதில் உங்களுக்கு என்ன பிரச்னை. நீங்க காசு தர போறீங்களா. எனக்கு என்று ஒரு குடும்பம் இருக்கு. அந்த குடும்பத்தை நான் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் வாழ வேண்டும் அதனால் அப்படி செய்தேன். யார் எனக்கு உதவி செய்திருப்பார்கள்.

காண்டம் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள். அதைக் கடையில் வாங்குவது ஒன்றும் தவறான விஷயம் இல்லை. இந்த காலத்தில் யாரை அதை பயன்படுத்துவது இல்லை. அதை பற்றி இந்த கால இளைஞர்கள் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்" என்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.