Shakeela on Vijay: விஜய் முன்னிலையில் ஆபாச டயலாக்.. சடாரென்று அடித்த ஷகிலா… எகிறிய சந்தானம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shakeela On Vijay: விஜய் முன்னிலையில் ஆபாச டயலாக்.. சடாரென்று அடித்த ஷகிலா… எகிறிய சந்தானம்!

Shakeela on Vijay: விஜய் முன்னிலையில் ஆபாச டயலாக்.. சடாரென்று அடித்த ஷகிலா… எகிறிய சந்தானம்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 05, 2024 05:18 AM IST

ஆனால் நான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற முதல் நாளே எனக்கு அவருடன் தான் காட்சி இருந்தது. ஆனால் விஜய் அப்படி நடந்து கொள்ளவில்லை. என்னை ஹாய் சகி என்று சத்தம் போட்டு அழைத்தார். இதை பார்த்த மொத்த படக்குழுவும் திகைத்து நின்றது.

ஷகிலா பேட்டி!
ஷகிலா பேட்டி!

இது குறித்து அவர் பேசும் போது, “விஜயுடன் நான் கொஞ்சம் நெருக்கமாகவே பழகி இருக்கிறேன். என்னுடைய தங்கை விஜய் உடன் ஆடி இருக்கிறாள். ஒரு காலத்தில் நான் சஞ்சீவ்,விஜய், ராம் என எல்லோரும் நண்பர்களாக  இருந்தோம். 

அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் நான் நடிக்க கமிட்டான பொழுது, என்னிடம் விஜய் யாருடனும் பேச மாட்டார் என்று சொல்லி இருந்தார்கள். அவர் பெரிய இடத்திற்கு சென்று விட்டதால், படத்தில் அவருடன் சேர்ந்து நடிப்பது போன்ற காட்சி வேண்டாம் என்று கூறி இருந்தேன். 

காரணம், எனக்குள் அவருடன் பழகின பழக்கம் என்ற ஒன்று இருக்கிறது அல்லவா...? அப்படி இருக்கும் பொழுது நான் அங்கு சென்று விஜயை யாரோ ஒருவர் போல பார்ப்பதெல்லாம் சரியாக இருக்காது என்று நினைத்தேன். 

ஆனால் நான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற முதல் நாளே எனக்கு அவருடன் தான் காட்சி இருந்தது. ஆனால் விஜய் அப்படி நடந்து கொள்ளவில்லை. என்னை ஹாய் சகி என்று சத்தம் போட்டு அழைத்தார். இதை பார்த்த மொத்த படக்குழுவும் திகைத்து நின்றது. 

இந்த காட்சி கிட்டத்தட்ட இரவு ஒன்றரை மணிக்கு எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த காட்சியில் சந்தானம் திருவண்ணாமலை ஜோதி இருக்கிறதோ இல்லையோ ஜோதி தியேட்டரில் அக்காவின்… என்ற ரீதியில் ஒரு டயலாக்கை சொன்னார். உடனே நான் குனிந்து கொசுவை அடித்தேன். இதைப் பார்த்த எல்லோரும் எகிறி விட்டார்கள். 

காரணம் என்னவென்றால் நான் செருப்பை எடுத்து சந்தானத்தை அடிக்க போகிறேன் என்று நினைத்துக் கொண்டார்கள். சந்தானமும் என்னிடம் வந்து அக்கா அடிக்கப்போகிறீர்களோ என்று நினைத்தேன் என்றார்.” என்று பேசினார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.