Shabana With Vijay: கனவு நிஜமாகி விட்டது… செம்பருத்தி ஷபானா
செம்பருத்தி ஷபானா முதல் முறையாக விஜய்யை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் ஹீரோயினாக நடித்தவர் ஷபானா. இந்த சீரியல் மூன்று ஆண்டுகள் கடந்து ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த ஆண்டு தான் நிறைவடைந்தது.
இவருக்கும், பாக்கியலட்சுமி சீரியல் நடித்து வந்த ஆரியனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இவர்களது திருமணம், மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது.
சின்னதிரையைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் தற்போது ஷபானா கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். விக்ரம் பிரபு நடிக்கும் படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்த நிலையில் சமீபத்தில் விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் ஷபானா கலந்து கொண்டார்.
இசை வெளியிட்டு நிகழ்ச்சியின் போது ஷபானா, விஜய்யை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் குறித்த பதிவில், ’ஒருவழியாக எனது கனவு நனவாகி விட்டது. விஜய் அண்ணனைப் பார்த்து விட்டேன். அவரை பார்க்கும் போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தைச் சொல்வதற்கு வார்த்தையே இல்லை.
ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன். அவரை பார்த்ததுக்கு அப்புறம் அவர் மேல இருக்கிற அன்பும் மரியாதையும் 100 மடங்கு அதிகமாகி உள்ளது. அவ்வளவு தான் சொல்வேன்” என பதிவு செய்து உள்ளார். இவரின் பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஷபானா, விஜய் ரசிகர் என்பது அனைவரும் தெரிந்த ஒன்றே. ஒரு முறை ஜீ தமிழ் விருது விழாவில் செம்பருத்தி சீரியல் நாயகி ஷபானா விருது வென்றார். அதில் சிறப்பு விருந்தினராக விஜய்யின் தாய் ஷோபா எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து கொண்டார்.
இவr விருது வழங்க மேடை ஏறியவர்கள் தளபதி விஜய்யின் அம்மா ஷோபாவிடம் தான் விஜய்யின் ரசிகை என கூறினார். அத்துடன் வாய்ப்பு கிடைக்கும் போது இதை பதிவு செய்ய அவர் தவறுவதில்லை.
விருதை இருவர் கையால் வாங்கி நெகிழ்ந்த ஷபானா, ஐயோ… தளபதி அம்மா, அப்பா என்று தனக்குள் கூறி, இது கனவா நிஜமா என உறுதிப்படுத்திக் கொண்டார். மேலும் விஜய் அண்ணாவைத் தான் கேட்டதாகச் சொல்லுமாறு கூறினார்.
இப்போது விஜய்யை அவர் நேரில் பார்த்து தனது கனவை நிஜமாக்கி உள்ளார்.
டாபிக்ஸ்