Serial Actress Lakshmi:என் போட்டவை மார்ஃபிங் பண்ணி மிரட்டுறாங்க- கதறும் லட்சுமி
நடிகை லட்சுமி வாசுதேவன் தன் மொபைல் ஹாக் செய்யப்பட்டதாக கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
சரவணன் மீனாட்சி, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி உள்ளிட்ட சிரீயல்களில் நடித்தவர் லட்சுமி வாசுதேவன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவர் தன் புகைப்படத்தை யாரோ தவறாக பயன்படுத்திவிட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
அதில், “கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 லட்ச ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக எனது வாட்சப் எண்ணிற்கு ஒரு லிங்க் வந்தது. அதை நான் கிளிக் செய்தவுடன் அந்த ஆப் டவுன்லோட் ஆகிவிட்டது.
பின்னர் 4 நாட்களுக்கு பிறகு நான் ரூ.5000 லோன் வாங்கியதாக போன் வந்தது. அதை நான் கண் டுகொள்ளாமல் இருந்ததால், பல மெசேஜ்கள், போன் கால்கள் வந்தது. என்னை ஆபாசமாக பேசி வாய்ஸ் மெசேஜும் அனுப்பினார்கள்.
நான் 5000 ரூபாய் காட்டவில்லை என்றால், எனது புகைப்படங்களை வைரல் செய்து விடுவேன் என்று கூறியும் மிரட்டல் வந்தது. உடனே நான் ஹைதராபாத் சைபர் கிரைமில் புகார் அளித்தேன்.
இதனால் என்னுடன் தொடர்பில் உள்ள உறவினர்கள், நண்பர்கள், பெற்றோர்கள் என அனைவர்க்கும் என்னை குறித்த ஆபாச புகைப்படங்கள் வேறு ஒரு எண்ணில் இருந்து அனுப்பட்டது எனக்கு தெரியவந்தது. அதன்பிறகே எனது மொபைல் ஹாக் செய்யப்பட்டது எனக்கு தெரிய வந்தது. இது போன்ற தப்பான ஒரு லிங்கை கிளிக் பண்ணதால் எனக்கு இப்படி ஒரு நிலைமை. என் பெற்றோருக்கும் என்னுடைய அசிங்கமான போட்டோ அனுப்பி இருக்கின்றனர்.
உங்க எண்ணிற்கு ஏதேனும் புது எண்ணில் இருந்து பரிசு விழுந்துள்ளது என்று வந்தால், அதை தயவு செய்து கிளிக் செய்யாதீங்க. உங்க மொபைலும் இது போன்று ஹேக் செய்யப்படும். பாதுகாப்பாக இருங்கள்" என அழுதப்படி கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டாபிக்ஸ்