Karuna vilasini: ‘காது கேட்காத தவளை போல.. அவர விமர்சிக்க எல்லாருக்கும் நேரம் இருக்கு’ - இளையராஜா பற்றி விலாஷினி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karuna Vilasini: ‘காது கேட்காத தவளை போல.. அவர விமர்சிக்க எல்லாருக்கும் நேரம் இருக்கு’ - இளையராஜா பற்றி விலாஷினி!

Karuna vilasini: ‘காது கேட்காத தவளை போல.. அவர விமர்சிக்க எல்லாருக்கும் நேரம் இருக்கு’ - இளையராஜா பற்றி விலாஷினி!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 19, 2023 09:54 AM IST

என்னுடைய அன்பு என்பது என்னுடைய அன்பை எல்லையின்றி கொடுப்பது. அதை நான் மீண்டும் அவரிடம் இருந்து எதிர்பார்ப்பது கிடையாது. அந்த விஷயத்தில் நான் என்னை மாற்றிக் கொள்ள மாட்டேன்; ஏனென்றால் எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும். நான் இப்போதும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.

இளையராஜா பர்சனல் பக்கம்!
இளையராஜா பர்சனல் பக்கம்!

இவர் இசையமைப்பாளர் இளையராஜவின் உறவுக்கார பெண். ராஜாதான் இவருக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்திருக்கிறார். ஆனால் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட, விவாகரத்து பெற்றுக்கொண்டு தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தன்னுடைய பர்சனல் வாழ்க்கை குறித்தும் இளையராஜாவின் நெகட்டிவான பக்கம் பற்றியும் பேசியிருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, “முதலில் ஒரு விஷயத்தை நான் இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாம் ஒருவரை நம்முடைய துணையாக ஏற்க விரும்பி விட்டால் அவர்களுக்காக நாம் நம்மை மாற்றிக் கொள்ளத் தான் வேண்டும் என்று கட்டாயம் கிடையாது.

அதையும் மீறி உங்களுக்கு அவர்களை மிகவும் பிடித்து விட்டது என்றால் அவர்கள் வழியிலேயே நீங்கள் சென்று விட வேண்டும். அவர்களுக்காக உங்களுடைய  குணாதிசயத்தை மாற்றிக்கொண்டு அவர்களுக்காக சின்ன சின்ன மாற்றங்களை செய்து கொள்ளலாம். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் அவர்தான் தனக்கு வேண்டும் என்று முடிவில் மிக மிக தெளிவாக இருக்க வேண்டும். 

என்னுடைய அன்பு என்பது என்னுடைய அன்பை எல்லையின்றி கொடுப்பது. அதை நான் மீண்டும் அவரிடம் இருந்து எதிர்பார்ப்பது கிடையாது. அந்த விஷயத்தில் நான் என்னை மாற்றிக் கொள்ள மாட்டேன்; ஏனென்றால் எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும். நான் இப்போதும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் நாம் யார் ஊடன் இருக்கிறோம். யாருடன் பேசுகிறோம் என்பதை பற்றியெல்லாம் இந்த சமூகத்திற்கு அக்கறை இல்லை. 

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை என்பது மிகவும் தனிப்பட்டதாகவே இருக்கிறது.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய பர்சனல் வாழ்க்கையானது யாரையும் பாதிக்காத அளவில் பார்த்துக்கொள்கிறேன். உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் நீங்கள் அவரைப் பற்றி பேசுவதையோ அவருக்கு எதிரான கருத்துக்களை கூறுவதோ தேவையற்ற ஒன்று என்று நான் நினைக்கிறேன். 

என்னுடைய நல்ல குணத்தை மட்டுமே இந்த பொது சமூகம் பார்த்து இருக்கிறது. என்னுடைய மிகவும் பர்சனலான விஷயங்களை என்னுடன் நெருங்கி பழகியவர்கள் மட்டுமே பார்த்து இருக்கிறார்கள். ஏதாவது நான் தவறாக நடக்கும் பட்சத்தில் அதை அவர்கள் மிகவும் கவனமுடன் அணுகுவார்கள்

அவருடைய குணாதிசயத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்று சொல்லி யாரும் உங்களை வற்புறுத்தவில்லை. அவர் ஒரு மிகப்பெரிய ஆளுமை. அவருடைய இசை உங்களுக்கு பிடித்தது என்றால் அதை ரசியுங்கள். அவர் சொல்லுகிற கருத்துக்கும் உங்களுக்கும் வேறுபாடு இருக்கிறது என்றால் போகட்டும் அதனால் ஒன்றும் இல்லை. அவரை விமர்சிக்கும் அளவிற்கு இங்கு பலருக்கும் நேரம் இருக்கிறது. நாலு பேர் நாலு விதமாக பேசுவார்கள் என்று சொல்வார்களே..அந்த விதமாகத்தான் நான் இதை பார்க்கிறேன்; ஆனால் அவர் அவரது வேலையை செய்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு அடுத்த  உயரத்திற்குச் சென்று கொண்டே தான் இருக்கிறார். ரஜினி சார்  ‘காது கேட்காத தவளை போன்று இருக்க வேண்டும் என்பார். அதுபோல அவர் அவருடைய பணி செய்து கொண்டே செல்கிறார்” என்று பேசினார்.

நன்றி: கலாட்டா 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.