Seetharaman: மகாவின் மாஸ்டர் ப்ளான்.. தலைவிரிகோலமாக வாசலில் அமர்ந்த சீதா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Seetharaman: மகாவின் மாஸ்டர் ப்ளான்.. தலைவிரிகோலமாக வாசலில் அமர்ந்த சீதா!

Seetharaman: மகாவின் மாஸ்டர் ப்ளான்.. தலைவிரிகோலமாக வாசலில் அமர்ந்த சீதா!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 10, 2023 04:01 PM IST

சீதா ராமன் சீரியலின் இன்றைய எபிசோடின்அப்டேட்டை இங்கு பார்க்கலாம்!

சீதாராமன் சீரியல்!
சீதாராமன் சீரியல்!

நடந்து முடிந்த ரிசப்ஷன் ஃபங்க்ஷனில் மகாலட்சுமி சீதாவை அனைவரும் முன்னிலையிலும் பைத்தியம் என சொல்லி அவமானப்படுத்தினாள். இப்படியான நிலையில் இன்றைய எபிசோடில், சீதா மகாலட்சுமியிடம் நான் என்ன தப்பு பண்ணேன் எதுக்காக இப்படி பண்ணீங்க என கேட்கிறாள். அதற்கு மகாலட்சுமி, என் வீட்டுக்குள்ள எனக்கு பிடிக்காம உள்ள வந்து என்னையே எதிர்த்து கேள்வி கேட்குற, இந்த மகாலட்சுமி யாருன்னு நெனச்ச என பேச, சீதா அதிர்ச்சி அடைகிறாள்.

மகாலட்சுமி
மகாலட்சுமி

அடுத்ததாக ராம் வரும்போது மகாலட்சுமி, சுபாஷ் என எல்லோரும் அப்படியே நல்லவர்கள் வேஷம் போடுகின்றனர். சீதா, சத்யா சொன்னதை கேட்டு இப்படி நடந்து கொள்கிறாள் என சொல்ல, ராம் சத்யாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறான். மேலும் மகாலட்சுமியின் நாடகத்தை அப்படியே முழுசாக நம்பி சீதாவின் மீது கோபப்படுகிறான். 

அடுத்து மகாலட்சுமி உடல்நிலை சரியில்லாதது போல நடிக்க, ராம் டாக்டரை அழைத்து வருகிறான். அப்போது வெளியே உட்கார்ந்திருந்த சீதாவை ராம் கண்டு கொள்ளவில்லை. ராம் வருவதற்குள் எல்லோரும் கிளிசரின் போட்டு, அவன் வரும் போது அழுவது போல நடிக்க, அப்போது அங்கு வரும் ராமின் மாமா துரையிடம் கிளிசரின் பாட்டில் சிக்குகிறது. 

ஆனால் எல்லோரும் அதை சமாளித்து விடுகின்றனர். அடுத்து மகாலட்சுமி தன்னுடைய திட்டம் அனைத்தும் அப்படியே நடந்து விட்டது என வீட்டுக்குள் சந்தோஷமாக சிரிக்க, சீதா வீட்டுக்கு வெளியே தலைவிரி கோலமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.