தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Seetha Raman Serial Today Episode

Seetha Raman: ராம் செயலால் கோபமான சீதா, மகாலட்சுமி போடும் சதி திட்டம்

Aarthi V HT Tamil
Mar 28, 2023 02:51 PM IST

சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் ‌பார்க்கலாம்.

சீதா ராமன்
சீதா ராமன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மதுமிதா மாலினியுடன் சீதா வீட்டுக்கு வருகிறாள். அங்கிருந்த அர்ச்சனா உட்பட எல்லோரும் மதுவை வரவேற்று நல்லபடியாக உபசரிக்கின்றனர். இதை பார்த்த சீதாவும் சந்தோஷம் அடைகிறாள். ராமின் தங்கைகள் மதுவை அண்ணி அண்ணி என அழைக்கின்றனர். பிறகு அங்கு வரும் மகாலட்சுமி மாலினி யாரென்றே தெரியாது போல யாரென கேட்டு பிறகு அவர்களை தங்கி விட்டு போக சொல்கிறாள்.

இந்த பக்கம் சூர்யா மதுமிதா சென்னைக்கு போன விஷயம் தெரியாமல் அண்ணன்களிடம் விசாரிக்க அவர்கள் பரிகாரம் செய்ய கோவிலுக்கு போயிருப்பதாக சொல்ல சூர்யா மதுமிதாவுக்கு போன் செய்ய ராம் மதுவின் போனை எடுத்து பேச சூர்யா டென்ஷன் ஆகிறான். உடனே மதுமிதா நான் தான் ஆண் குரலில் பேசி விளையாடியதாக சமாளிக்கிறாள்.

அடுத்ததாக மதுமிதா ரூமில் துணி மாற்றிக் கொண்டிருக்க ராம் தெரியாமல் ரூமுக்குள் வந்து பிறகு மதுவிடம் மன்னிப்பு கேட்டு வெளியே வர சீதா இதை பார்த்து கோபம் கொள்கிறாள். அடுத்து மதுமிதா உனக்கு இவ்வளவு பெரிய வாழ்க்கை அமைந்திருக்கு, நீ கொடுத்து வச்சவ என பேசிக்கொண்டிருக்க மகாலட்சுமி வீட்டுக்கு உமாவும் ராஜ சேகரும் வருகின்றனர்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்