தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Gauthami: ‘கமலால் மகளுக்கு செக்ஸ் டார்ச்சர்’.. மீண்டும் புள்ளி வைக்கும் கெளதமி? - உண்மையை உடைத்த பிரபலம்!

Actress Gauthami: ‘கமலால் மகளுக்கு செக்ஸ் டார்ச்சர்’.. மீண்டும் புள்ளி வைக்கும் கெளதமி? - உண்மையை உடைத்த பிரபலம்!

HT Tamil Desk HT Tamil
Apr 12, 2024 06:15 AM IST

சரிகாவை கல்யாணம் செய்து கொண்டு விவாகரத்து செய்தார். அதன் பின்னர் தான் கௌதமியுடன் அவர் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து கொண்டிருந்தார். கடைசியில் அவருடனான உறவையும் முறித்துக்கொண்டார்.

கமல் - கெளதமி பிரச்சினை!
கமல் - கெளதமி பிரச்சினை!

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவர் பேசும் பொழுது, “கமலுடன் இருந்து கௌதமி விலகும் பொழுது கருத்து வேறுபாடு காரணமாக பிரியவில்லை. மகளின் பாதுகாப்பு நலன் கருதி காரணமாகவே பிரிகிறேன் என்று கூறி சென்றார். கமலின் முந்தைய சரித்திரத்தைப் பொறுத்தவரை, அவர் முதன் முதலாக வாணியை கல்யாணம் செய்து கொண்டு விவாகரத்து செய்தார். 

அதன் பின்னர் சரிகாவை கல்யாணம் செய்து கொண்டு விவாகரத்து செய்தார். அதன் பின்னர் தான் கௌதமியுடன் அவர் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து கொண்டிருந்தார். கடைசியில் அவருடனான உறவையும் முறித்துக்கொண்டார். 

என்னைப் பொருத்தவரை கௌதமிக்கு அறிவு கிடையாது. கையில் ஒரு குழந்தை இருக்கும் பொழுது, திருமணம் ஆகி பலமுறை விவாகரத்தான ஒருவருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் எந்த பெண்ணாவது இருப்பாரா? 

அது தவறு; காரணம், உங்களுக்கென்று ஒரு மகள் இருக்கிறார். அவர் நாளை வளர்ந்து பெரிய ஆள் ஆகும் போது, உங்களுடன் இருப்பவர், தந்தை ஸ்தானத்தில் இருந்து அந்த பெண்ணுக்கு அனைத்தையும் செய்வாரா என்ன? 

கமல் ஆண், பெண் விஷயத்தில் பலவீனமானவர் என்பது ஊர் அறிந்த விஷயம். அவரது கட்சியும் அடுத்த நிலைக்குப் போகாததற்கான காரணமும் அதுதான். கௌதமி இப்படியான ஒரு கருத்தை வெளியிட்டு சென்றதை பார்க்கும் போது, அதில் ஒரு விதமான சந்தேகம் எழுகிறது. 

இந்த விஷயத்தை வெளியே சொன்னால், தன்னுடைய குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தே, கௌதமி இப்படியான ஒரு கருத்தை வெளியிட்டு இருப்பதை பார்க்கும் பொழுது, கமலால் கௌதமியின் மகளுக்கு செக்ஸ் டார்ச்சர் நடந்து இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்து நிற்கிறது. 

கமல் இப்போது அப்படி இல்லை. அப்போது இருந்தே அவர் அப்படித்தான்.  எய்ட்ஸ் பரவிய காலத்தில் எல்லோரும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை பற்றி பேசிக்கொண்டிருந்த நிலையில், கமல்ஹாசன் ஆணுறையை பயன்படுத்தி பாதுகாப்பான உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார். 

ஆகையால் இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை கமல்ஹாசன் முன்வந்து பதில் சொல்ல வேண்டும்; கௌதமியும் தன் மகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளியே அப்பட்டமாக கூற வேண்டும். வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லா விதமான குறைகளும் இருக்கிறது. அதை பொறுத்துக் கொண்டு, சகித்துக் கொண்டுதான் வாழ்வதுதான் வாழ்க்கை. ஆனால் கமல்ஹாசன் ஆகிய நீங்கள் அப்படி வாழ்ந்தீர்களா?” என்று பேசினார். 

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்