Farhana controversy: 'ஃபர்ஹானா' படத்தில் தவறான சித்தரிப்புகள் இல்லை - எஸ்டிபிஐ சர்டிபிகேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Farhana Controversy: 'ஃபர்ஹானா' படத்தில் தவறான சித்தரிப்புகள் இல்லை - எஸ்டிபிஐ சர்டிபிகேட்

Farhana controversy: 'ஃபர்ஹானா' படத்தில் தவறான சித்தரிப்புகள் இல்லை - எஸ்டிபிஐ சர்டிபிகேட்

Karthikeyan S HT Tamil
May 15, 2023 10:01 AM IST

SDPI Statement: 'ஃபர்ஹானா’ படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகளோ அல்லது இஸ்லாமிய சமூகத்தின் மனது புண்படும்படியான வசனங்களோ இடம் பெறவில்லை என்று எஸ்டிபிஐ கட்சி தெரிவித்துள்ளது.

ஃபர்ஹானா
ஃபர்ஹானா

இந்த நிலையில் ‘ஃபர்ஹானா’ படத்தின் சிறப்புக் காட்சி இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களுக்காக நேற்று திரையிடப்பட்டது. இதில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளில் நிர்வாகிகள் கலந்து கொண்டு படத்தை பார்த்தனர்.

பின்னர் ‘ஃபர்ஹானா’ திரைப்படம் குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் அச.உமர் பாரூக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ஃபர்ஹானா' திரைப்பட குழுவினரின் அழைப்பின் பேரில் முஸ்லிம் சமுதாய தலைவர்களுக்காக பிரத்தியேகமாக சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதில், பல சமூக தலைவர்களும் பங்கேற்ற போது எஸ்டிபிஐ கட்சி சார்பாக நானும் மற்ற நிர்வாகிகளும் கலந்து கொண்டு அப்படத்தை பார்த்தோம். படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகளோ அல்லது சமூகத்தின் மனது புண்படும்படியான வசனங்களோ இடம் பெறவில்லை. எனவே யூகத்தின் அடிப்படையில் இதுவரை பேசப்பட்டவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என கருதுகிறேன் .

ஒரு ஏழை முஸ்லிம் குடும்பத்தின் கதைக்களத்தை மையமாக கொண்டு, இயக்குநர் கதையை நகர்த்தி உள்ளார். அதில் சில படிப்பினைகளும் உள்ளன. மற்றபடி தவறான சித்தரிப்புகள் இப்படத்தில் இல்லை என்பதால் ‘ஃபர்ஹானா' பட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்." இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

முன்னதாக, இந்தத்திரைப்படம் எந்த மதத்தினரையும் புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டதல்ல என்று தயாரிப்பாளர் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இருப்பினும் இந்தப்படத்திற்கு திருவாரூர் மாவட்டத்தில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. ஃபர்ஹானா திரைப்படம் திரையிடப்படுவதாக இருந்தது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் அங்கு போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்ததையடுத்து அந்தக்காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.