Rekha: ஜெனிஃபர் டீச்சர்.. ஜெனிஃபர் டீச்சர்.. அப்ப சத்யராஜூக்கு நெஞ்சுல அவ்வளவு முடி..வாயை பிளந்த ரேகா!-sathyaraj actress rekha latest interview about bharathiraja kadalora kavithaigal experiences - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rekha: ஜெனிஃபர் டீச்சர்.. ஜெனிஃபர் டீச்சர்.. அப்ப சத்யராஜூக்கு நெஞ்சுல அவ்வளவு முடி..வாயை பிளந்த ரேகா!

Rekha: ஜெனிஃபர் டீச்சர்.. ஜெனிஃபர் டீச்சர்.. அப்ப சத்யராஜூக்கு நெஞ்சுல அவ்வளவு முடி..வாயை பிளந்த ரேகா!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 14, 2024 08:41 AM IST

Rekha: அப்போது சத்யராஜ் மிகவும் உயரமாக, வாட்ட சாட்டமாக இருப்பார். அவருக்கு அப்பொழுது நெஞ்சில் அவ்வளவு முடி இருக்கும். அதை பார்க்கும் பொழுது, என்ன இவருக்கு அங்கே இவ்வளவு முடியிருக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கும். -

Rekha: ஜெனிஃபர் டீச்சர்.. ஜெனிஃபர் டீச்சர்.. அப்ப சத்யராஜூக்கு நெஞ்சுல அவ்வளவு முடி..வாயை பிளந்த ரேகா!
Rekha: ஜெனிஃபர் டீச்சர்.. ஜெனிஃபர் டீச்சர்.. அப்ப சத்யராஜூக்கு நெஞ்சுல அவ்வளவு முடி..வாயை பிளந்த ரேகா!

நெஞ்சில் இவ்வளவு முடியா?

இது குறித்து ரேகா பேசும் போது, “ என்னுடைய  முதல் திரைப்படமான கடலோரகவிதைகள் திரைப்படம், அடிப்படையாகவே மிகவும் ஸ்ட்ராங்காக அமைந்து விட்டது. காரணம் என்னவென்றால், அந்த படத்தில் இளையராஜா பாரதிராஜா, கண்ணன் போன்ற மிகப் பெரிய ஆளுமைகள் பணியாற்றியிருந்தனர். அப்போது சத்யராஜ் மிகவும் உயரமாக, வாட்ட சாட்டமாக இருப்பார். அவருக்கு அப்பொழுது நெஞ்சில் அவ்வளவு முடி இருக்கும். அதை பார்க்கும் பொழுது, என்ன இவருக்கு அங்கே இவ்வளவு முடியிருக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கும். 

நான் படப்பிடிப்பில் மிகவும் குறும்புத்தனமாகவே இருந்தேன். நான் அங்கும், இங்குமாக விளையாடிக் கொண்டே இருப்பேன். இதை பார்க்கும் சத்யராஜ், பாரதிராஜா சாரை கூப்பிட்டு, சார் நீங்கள் ஜெனிஃபர் டீச்சர் கதாபாத்திரத்தை எங்கேயோ வைத்திருக்கிறீர்கள். ஆனால் அந்தப் பெண்ணை பாருங்கள். அங்கு ஓடிப் பிடித்து, எதையோ சுட்டு சாப்பிட்டு கொண்டு இருக்கிறது என்று சொல்லிக் கொடுப்பார். 

அழுதே விட்டேன். 

இதையடுத்து பாரதிராஜா சார், என்னை டேய் இங்கே வா என்று என்னை அரட்டுவார். அப்போது பெரிய பந்தாவெல்லாம் யாரிடமும் இருக்காது. நான் சத்யராஜ் சார் நடிப்பதை பார்ப்பேன். பாரதி சார் சொல்லிக் கொடுப்பதை 30 சதவீதம் செய்தாலே நினைத்தது வந்துவிடும். கடலோர கவிதைகள் திரைப்படத்தில் நான் மீனை எடுத்துக் கொண்டு, அழுது கொண்டே வருவது போன்ற காட்சி ஒன்று இருக்கும். அந்த சீனில் பாரதிராஜா சார் எமோஷன் சரியாக வரவில்லை என்று சொல்லி என்னை அவ்வளவு திட்டு திட்டினார். நீ ஆசைப்பட்ட ஒருவனை காணவில்லை. அதை நினைத்து அழு அழு என்று கடிந்து கொண்டே இருந்தார். அவரை அவர் திட்டியதை பார்த்து பார்த்தே நான் அழுதுவிட்டேன். அப்படித்தான் அந்த காட்சி நடந்தது” என்று பேசினார். 

ரேகாவும் சத்யராஜூம் அண்மையில் ‘மை பர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ என்ற வெப்சீரிஸில் இணைந்து நடித்திருக்கிறார்கள். ‘ரெட்டச்சுழி’. ‘ஆண் தேவதை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் தாமிரா இந்த இணையத் தொடரை இயக்கியுள்ளார். இந்த சீரிஸில் சத்யராஜுடன் நடிகைகள் சீதா, ரேகா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் இந்த சீரிஸில், நடிகர்கள் வர்ஷா பொல்லம்மா, ரக்‌ஷன், லிவிங்ஸ்டன், அஜீத் காலிக், கிருத்திகா மனோகர், ராகவி மற்றும் ரேஷ்மா பசுபால்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.