தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Sasikumar To Comeback As Director After 14 Years And Directing Nayantara In His New Film

Sasikumar: 14 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநராக கம்பேக்! நயன்தாரா ஹீரோயின் - சசிக்குமார் படத்தின் முழு விவரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 27, 2024 05:46 PM IST

14 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குநராக கம்பேக் கொடுக்க இருக்கிறார் சசிக்குமார். குடும்ப பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.

நயன்தாராவை இயக்க இருக்கும் சசிக்குமார்
நயன்தாராவை இயக்க இருக்கும் சசிக்குமார்

ட்ரெண்டிங் செய்திகள்

80களின் பின்னணி காதல், ஆக்‌ஷன் கலந்த கேங்ஸ்டர் படமாக இருந்த சுப்பிரமணியபுரம் சூப்பர் ஹிட்டானது.  இந்த படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த சசிக்குமார்,  அடுத்து சமுத்திரகனி இயக்கிய நாடேடிகள் படத்தில் ஹீரோவாக நடித்தார்.

நாடோடிகள் படத்தை தொடர்ந்து ஈசன் என்ற படத்தை இயக்கினார். இதன் பிறகு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கினார் சசிக்குமார். அத்துடன் படங்களை தயாரிக்கும் பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தினார்.

தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்த அவர், கிராமத்து பின்னணியில் ஆக்‌ஷன், காதல், குடும்ப செண்டிமென்ட் படங்களில் நடித்தார். இவரது படங்கள் பெரும்பாலானை பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலையும் பெற்று தந்தது. 

இயக்குநராக கம்பேக்

தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த சசிக்குமார் தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குநராக கம்பேக் கொடுக்க உள்ளார். சசிக்குமார் இயக்க இருக்கும் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க உள்ளாராம்.

குடும்ப பின்னணி கதையை கொண்ட படமாக சசிக்குமார் இயக்க இருக்கும் படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது படம் தொடர்பாக ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று அறிவிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது சசிக்குமார் இயக்க இருக்கும் மூன்றாவது படமாக அமையவுள்ளது. விரைவில் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

சசிக்குமார் புதிய படங்கள்

சசிக்குமார் நடிப்பில் கடந்த ஆண்டில் அயோத்தி படம் வெளியானது. உண்மை கதையை அடிப்படையாக கொண்டு இந்த படத்தின் கதை அமைந்திருந்தது. ரசிகர்களை கவர்ந்த இந்த படம், விமர்சக ரீதியாகவும் பாராட்டை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து பகைவனுக்கு அருள்வாய், நா நா, நந்தன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனுடன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தை இயக்கவும் உள்ளார் சசிக்குமார்.

நயன்தாரா புதிய படம்

நயன்தாரா நடிப்பில் டெஸ்ட் என்ற படம் முடிந்துள்ளது. படத்தை திரைப்பட தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கியுள்ளார். டெஸ்ட் படம் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகிறார். 

அத்துடன் மன்னாங்கட்டி என்ற படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த படத்துக்கு பின்னர் சசிக்குமார் இயக்கும் படத்தில் நடிப்பார் என தெரிகிறது. விஸ்வாசம், அண்ணாத்த படங்களை போல் குடும்ப பின்னணி கதாபாத்திரத்தில் சசிக்குமார் இயக்கும் படத்தில் நயன்தாரா நடிக்க இருக்கிறார்.

நயன்தாரா நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம், அவரது 75வது படமாக அண்ணப்பூரணி வெளியானது. ரசிகர்களை கவர்ந்திருந்த போதிலும், படம் தொடர்பாக சில சர்ச்சைகளும் எழுந்தன. இதனால் ஓடிடியில் இருந்து இந்த படம் நீக்கப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்