Varalaxmi: வரலட்சுமி கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார் - சரத்குமார் புகழாரம்
வீர சிம்ஹா ரெட்டி படத்தில் வரலட்சுமி கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார் என சரத்குமார் ட்விட் செய்துள்ளார்.
தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான படம்,'வீர சிம்ஹா ரெட்டி'. கோபிசந்த் மல்லினேனி இயக்கியுள்ள இந்தப்படம் தெலுங்கில் விஜய்யின் வாரிசுடுக்கு போட்டியாக வெளியாகியுள்ளது.
வீரசிம்ம ரெட்டி (பாலகிருஷ்ணா) ராயலசீமாவில் ஒரு பெரிய தலைவராக இருந்தார். கோயில் இல்லாத கடவுளாகவே மக்கள் அவரைப் பார்க்கிறார்கள். சீமை மக்கள் என்ன கஷ்டம் வந்தாலும் தன் உயிரை எண்ணாத தலைவர்.
அவரது சகோதரி பானுமதி (வரலக்ஷ்மி சரத் குமார்) கோபம்.. வெறுப்பு கொண்டவர். பிரதாப் ரெட்டி (துனியா விஜய்) வீரசிம்ம ரெட்டிக்கு நெருக்கமான மற்றொரு நபர். இவர்கள் இருவரும் வீரசிம்ம ரெட்டியை கொல்ல முயற்சிக்கின்றனர்.
ஏன் அவனைக் கொல்ல நினைக்கிறாள்..? நடுவில் ஜெயசிம்ம ரெட்டி (பாலகிருஷ்ணா) ஏன் வந்தார்? சீமாவை விட்டு விலகி இஸ்தான்புல்லில் ஏன் ஜெயசிம்மா வளர வேண்டும்..? வீரசிம்ம ரெட்டிக்கும் பிரதாப் ரெட்டிக்கும் என்ன காரணம் என்பது மீதிக்கதை.
தெலுங்கில் இப்படம் வெற்றிப் பெற்ற நிலையில் மற்ற மொழிகளில் கலவையான விமர்சனங்களையே பெற்று உள்ளது.
இந்நிலையில் வரலட்சுமி சரத்குமார் எதிர்மறை கதாபாத்திரத்தில் ஆக்ரோஷமான நடிப்பில் நடித்து இருக்கிறார். ‘சர்கார்’ பட கோமளவள்ளியை பார்ப்பது போல் உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இவரின் நடிப்பை பாராட்டி நடிகரும், அவரது தந்தையுமான சரத்குமார் ட்விட் செய்து உள்ளார்.
அதில், “ வீர சிம்ஹா ரெட்டி படத்தை பார்த்தேன். அண்ணனுக்கும் சகோதரிக்கும் இடையிலான உறவின் அசாதாரண விவரிப்பு, உண்மையில் ஒரு புதிய கண்ணோட்டம் மற்றும் அணுகுமுறை, இயக்குநரால் மிகவும் சிறப்பாகக் கையாளப்பட்டது.
எப்பொழுதும் போல், அப்பா மற்றும் மகன் என இருவரையும் தனது கதாபாத்திரத்தை நியாயப்படுத்தி, சண்டை மற்றும் பாடல் காட்சிகளை எளிதாக கையாண்டுள்ளார்.
வரலட்சுமி சரத்குமார், பாலய்யாவுடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொண்டார். அவருக்குக் கொடுக்கப்பட்ட கேரக்டரில் வாழ்ந்து, பார்வையாளர்கள் ஈர்க்கப்பட்ட இடத்தில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றுள்ளார். பாலையாவின் ரசிகர்களுக்கும், ரசிகர்களுக்கும் சமமான சுவாரசியமான பொழுதுபோக்குப் படம். ஒட்டுமொத்த நடிகர்களுக்கும், குழுவினருக்கும் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டு உள்ளார். இதனைப் பார்த்து வரலட்சுமி சரத்குமார், “நன்றி அப்பா” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
டாபிக்ஸ்