Sarath Babu Health: செயலிழந்த உறுப்புகள்.. கவலைக்கிடமான நிலையில் நடிகர் சரத் பாபு
நடிகர் சரத் பாபு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
1977 ஆம் ஆண்டு ’பட்டினப்பிரவேசம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் சரத் பாபு. இவர் நிழல் பார்க்கிரது, வட்டத்துக்குள் சதுரன், முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார்.
ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைக்கும் கதாப்பாத்திரங்கள் அனைத்திலும் நடித்து கலக்கி உள்ளார். குறிப்பாக கமல் ஹாசன், ரஜினிகாந்த் படங்களில் நண்பர் கேரக்டர் என்றாலே தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் சரத் பாபுவை தான் அழைப்பார்கள். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் கடைசியாக தமிழில் வசந்த முல்லை என்ற படத்தில் நடித்து இருந்தார். மேலும் சில சின்னத்திரை தொடர்களிலும் சரத் பாபு நடித்திருக்கிறார். இவர் கிட்டத்தட்ட 50 வருடங்களாக 200 திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சரத் பாபு கடந்த மாதம் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், உடல் உறுப்பு நோய் அழற்சியால் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வருகிறார். தற்போது அவரது உடல் நிலை பின்தங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை குடும்பத்தினர் ஹைதராபாத்திற்கு மாற்றினர். கச்சிபௌலியில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் அவர் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவருக்கு வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் அவர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம். மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
டாபிக்ஸ்