Sarath Babu: நடிகர் சரத்பாபுவின் ஆல் டைம் பெஸ்ட் படங்கள்
நடிகர் சரத்பாபுவின் ஆல் டைம் பெஸ்ட் படங்கள் பற்றி பார்க்கலாம்.
முள்ளும் மலரும்
இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முள்ளும் மலரும். இதில் ரஜினி, சரத்பாபு, ஜெயலட்சுமி, சோபனா மற்றும் வெண்ணிறாடை மூர்த்தி ஆகியோர் நடித்து உள்ளனர்.
இப்படம் ரஜினிக்கு எப்படி திருப்புமுனையாக அமைந்ததோ அதே மாதிரி சரத் பாபுவுக்கும் இப்படம் பெரும் தாகத்தை ஏற்படுத்தியது. இவர் ஜிப்பில் ஏறிக்கொண்டு பாடிய “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா” பாடல் இன்னும் ரசிகர்கள் மனதிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
நிழல் நிஜமாகிறது
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு நிழல் நிஜமாகிறது திரைப்படம் வெளியானது. இதில் கமல் ஹாசன், சுமித்ரா, சோபா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கமலின் நெருங்கிய நண்பராக சரத்பாபு நடித்தார். அத்துடன் இவருடைய தங்கை திருமணத்தின் மீது நாட்டம் இல்லாதது தெரிந்து கொண்டு அவள் மனதை மாற்றும் விதமாக இக்கதை அமைந்திருக்கும். இப்படம் சரத் பாப்புக்கு சினிமா கேரியரில் முக்கியமானது.
வேலைக்காரன்
எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வேலைக்காரன் திரைப்படம் வெளியானது. இதில் ரஜினி, சரத் பாபு, பல்லவி, அமலா, கே ஆர் விஜயா நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சரத் பாபுக்கு வரும் ஆபத்தை தடுக்கும் விதமாக ரஜினி எதிராலிடம் கொடுக்கும் சபதத்தை நிறைவேற்றும் விதமாக படம் அமைந்திருக்கும். சரத் பாபு ராஜகுமாரி என்ற கேரக்டரில் 5 ஸ்டார் ஹோட்டலுக்கு ஓனராக நடித்திருப்பார்.
அண்ணாமலை
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு அண்ணாமலை திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, குஷ்பூ, சரத் பாபு ஆகியோர் நடித்தார்கள். இதில் ரஜினி அண்ணாமலை கேரக்டரிலும், சரத் பாபு அசோக் என்ற கேரக்டரில் 5 ஸ்டார் ஹோட்டலின் உரிமையாளராக நடித்திருப்பார்கள். பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டதால் சரத் பாபுவிடம் உன்னை விட நான் பெரிய ஆளாக வருவேன் என்று சபதம் விட்டு ஜெயிப்பதை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.
நெஞ்சத்தை கிள்ளாதே
மகேந்திரன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படம் ரிலீஸானது. இதில் சுகாசினி, சரத்பாபு, பிரதாப் மற்றும் மோகன் ஆகியோர் நடித்து இருந்தனர். இப்படத்தில் சரத்பாபு மீது சந்தேகப்படும் அவரது மனைவியை வைத்து அதனால் ஏற்படும் பிரச்னைகளை முன் எடுத்து சொல்லும் விதமாக கதை அமைந்திருக்கும். இப்படம் சரத்பாபுவுக்கு சினிமாவில் ஒரு நல்ல இடத்தை அமைத்துக் கொடுத்தது.
முத்து
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு முத்து திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, மீனா, சரத்பாபு, ராதாரவி மற்றும் செந்தில் ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் ரஜினிக்கு முதலாளி என்ற கேரக்டரில் சரத் பாபு நடித்தார். அத்துடன் ரஜினிக்கு இணையாக கதாபாத்திரமும் இவருக்கு கிடைத்ததால் அதிக பாராட்டுக்களும், வரவேற்பும் கிடைத்தது.
டாபிக்ஸ்