தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Leo Vijay:விஜய் கண்ணு..காஷ்மீரில் Kgf வில்லன் எண்ட்ரி; பற்றி எரியும் இணையம்!

Leo Vijay:விஜய் கண்ணு..காஷ்மீரில் KGF வில்லன் எண்ட்ரி; பற்றி எரியும் இணையம்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 11, 2023 04:13 PM IST

காஷ்மீர் படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் கொண்ட எக்ஸ்க்ளூசிவான வீடியோ ஒன்றை லியோ படக்குழு பகிர்ந்து இருக்கிறது

விஜய், சஞ்சய் தத்
விஜய், சஞ்சய் தத்

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்; இதில் 14 வருடங்களுக்கு பிறகு அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா இணைந்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் கெளதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

நடிகர் விக்ரமும், கமலும் கூட இந்த படத்தில் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது; இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. ஜீரோ டிகிரி செல்சியஸ் கடும் குளிரிலும் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும், காஷ்மீர் படபிடிப்பை முடிக்க படக்குழுவினர் தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது த்ரிஷாவுக்கும் லோகேஷ் கனகராஜுக்கும் இடையே கருத்துவேறு பாடு ஏற்பட்டதாகவும், காஷ்மீர் குளிரை தாங்க முடியாததாலும் த்ரிஷா படத்தில் விலகிவிட்டதாகவும் தகவல் வெளியானது. அதற்கு அவரது அம்மா அப்படியெல்லாம் இல்லை என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்; அண்மையில் லியோ படத்தில் தன்னுடைய காட்சிகளை நிறைவு செய்த இயக்குநர் மிஷ்கின் அறிக்கை வெளியிட்டு நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.

அண்மையில் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா காஷ்மீர் படப்பிடிப்பில் எடுத்த வீடியோவை வெளியிட்டு லியோ படப்பிடிப்பில் உயர்தர Red V RAPTOR XL கேமரா பயன்படுத்தபடுவதாக தெரிவித்து இருந்தார்.

அடுத்தடுத்த அப்டேட்டுகளால் மகிழ்ச்சியில் மூழ்கியிருந்த விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் சஞ்சய் தத் காஷ்மீர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த எக்ஸ்க்ளூசிவ்வான வீடியோவை படக்குழு தற்போது பகிர்ந்து இருக்கிறது.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்