Sangeetha: மரியாதையே கொடுக்க மாட்டாங்க.. எனக்கு தமிழ் பிடிக்காது.. தெலுங்குதான்’ -சங்கீதா பளார் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sangeetha: மரியாதையே கொடுக்க மாட்டாங்க.. எனக்கு தமிழ் பிடிக்காது.. தெலுங்குதான்’ -சங்கீதா பளார் பேட்டி!

Sangeetha: மரியாதையே கொடுக்க மாட்டாங்க.. எனக்கு தமிழ் பிடிக்காது.. தெலுங்குதான்’ -சங்கீதா பளார் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 17, 2024 04:44 PM IST

Sangeetha: எனக்கு தமிழ் பிடிக்காது. எனக்கு தெலுங்கு தான் மிகவும் பிடிக்கும். நான் தெலுங்கில்தான் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். - சங்கீதா பளார் பேட்டி!

Sangeetha: மரியாதையே கொடுக்க மாட்டாங்க.. எனக்கு தமிழ் பிடிக்காது.. தெலுங்குதான்’ -சங்கீதா பளார் பேட்டி!
Sangeetha: மரியாதையே கொடுக்க மாட்டாங்க.. எனக்கு தமிழ் பிடிக்காது.. தெலுங்குதான்’ -சங்கீதா பளார் பேட்டி!

தமிழ் எனக்கு பிடிக்காது

இது குறித்து அண்மையில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்த அவர், “எனக்கு தமிழ் பிடிக்காது. எனக்கு தெலுங்கு தான் மிகவும் பிடிக்கும். நான் தெலுங்கில்தான் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். இதைப் பார்த்து எத்தனை பேர் கோபப்பட்டாலும் பரவாயில்லை. இதை நான் சொல்வதற்கு காரணம் என்னவென்றால் தெலுங்கில் எனக்கு கொடுக்கப்படும் மரியாதை இங்கு எனக்கு கிடைப்பதில்லை.

தமிழ் சினிமாவில் இருப்பவர்களுக்கு ஏன் இந்த மனப்பான்மை இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் வேண்டுமென்றேதான் தமிழில் படங்களில் நடிப்பது கிடையாது. காரணம் என்னவென்றால் தமிழை விட தெலுங்கில் எனக்கு நல்ல மரியாதை, நல்ல சம்பளம், நல்ல வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன.

மரியாதையே இல்லை

தமிழில் ஏதாவது ஒரு படத்தில் என்னை நடிக்க வேண்டும் என்று கேட்பவர்கள், மரியாதை குறைவாகத்தான் முதலில் பேசுவார்கள். நான் என்னவோ இங்கு கரண்ட் பில் கட்ட கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பது போலவும், அவர்கள்தான் எனக்கு வாழ்க்கை தருவது போலவும் பேசுவார்கள். உங்களுக்கு சம்பளம் இவ்வளவு என்று நாங்கள் நிர்ணயித்து இருக்கிறோம். நீங்கள் வந்து நடித்துக் கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்பார்கள்.

நான் உங்களை அழைத்து வாய்ப்பு கேட்கவில்லை நீங்கள்தான் என்னை அழைத்து உங்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்கிறீர்கள். அப்படி இருக்கும் பொழுது, நான்தான் எனக்கான சம்பளத்தை முடிவு செய்ய வேண்டும். அதை நான் சொன்னால் இல்லை இல்லை இதுதான் சரியாக இருக்கும் என்று வாதம் செய்வார்கள்.

எனக்கு அது போன்று பேசுவதெல்லாம் சுத்தமாக பிடிக்காது. எனக்கான மரியாதையை அவர்கள் கொடுக்க வேண்டும். நான் பெரிதாக இந்த துறையில் கிழித்து விட்டேன், பெரிய அளவில் சாதித்து விட்டேன் என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால் இந்தத் துறையில் நான் கிட்டத்தட்ட 30 வருடங்கள் பயணித்து இருக்கிறேன். அதுவே எனக்கு மிகப்பெரிய சாதனைதான்.” என்று பேசினார்.

பாலாவுடன் பிதாமகன் படத்தில் வேலை பார்த்த அனுபவம் குறித்து நடிகை சங்கீதா!

இது குறித்து அவர் பேசும் போது, “பாலா சாரிடம் போன் செய்து உங்களது அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுங்கள் சார். எனக்கு வேலை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை. அதுவும் உங்கள் கையால் வேலை கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் என்று சொன்னேன். உடனே அவர் இப்போ என்ன செய்யற என்று கேட்டார். அப்போது நான் பாலகிருஷ்ணா சார் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன்.

அந்த படத்தின் செட்யூல் கேன்சல் ஆகி இருந்தது. இதையடுத்து நான் சென்னை வருகிறேன் என்பதை அவரிடம் சொன்னேன். உடனே அவர் கிளம்பி மதுரை வா என்றார். அதற்கு சார் அந்த கதாபாத்திரத்தில் வேறு ஹீரோயின் நடித்துக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். அவரது வேலையை கெடுத்து, நான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன் என்று சொன்னவுடன், இந்த வியாக்கியானம் எல்லாம் நான் உன்னிடம் கேட்கவில்லை. கிளம்பி வா என்றால் வா என்றார்.

படத்தில் மேக்கப் கிடையாது என்று முன்னமே சொல்லி இருந்தார்கள். இதையடுத்து என்னை அழுக்காக்கி, அழுக்கு புடவையை கொடுத்து, அவர் முன்னால் கொண்டு வந்து நிப்பாட்டினார்கள். அதை பார்த்து அதிர்ச்சியான பாலா, என்ன இன்னமும் இந்த பொண்ணு இவ்வளவு ஃபிரஷ்ஷாக இருக்கிறாள். அவள் உடுத்தியிருக்கும் புடவையை மண்ணில் புரட்டி கொடுங்கள் என்றார். அதைக்கேட்டு அதிர்ச்சியான நான் அதன் பின்னர் சூர்யா, விக்ரமை பார்த்தேன். அவர்கள் என்னை விட கேவலமாக இருந்தார்கள்.

அதன் பின்னர் நாங்கள் பாலா இப்படித்தான் என்று பழகிக்கொண்டோம். எங்களுடைய ஒரே லட்சியம் அவரை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற ஒற்றைப் புள்ளியில் இருந்தது. ஒவ்வொரு காட்சி முடிந்த பின்னரும், அவர் மானிட்டரில் மொத்த காட்சியையும் பார்ப்பார். அவர் பார்த்து முடித்தவுடன் சூப்பர் என்று சொல்லிவிட்டால், எங்களுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அப்படித்தான் அந்த படத்தின் முழு படப்பிடிப்பும் சென்றது” என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.