Sivakarthikeyan: ‘காமெடியன்னா இவ்வளவுதான் வரும்’.. வார்த்தையை விட்ட சிவா.. மேடையிலேயே வெளுத்த சங்கீதா!-sangeetha krish latest interview about fight with sivakarthikeyan in jodi dance vijay tv - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sivakarthikeyan: ‘காமெடியன்னா இவ்வளவுதான் வரும்’.. வார்த்தையை விட்ட சிவா.. மேடையிலேயே வெளுத்த சங்கீதா!

Sivakarthikeyan: ‘காமெடியன்னா இவ்வளவுதான் வரும்’.. வார்த்தையை விட்ட சிவா.. மேடையிலேயே வெளுத்த சங்கீதா!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 26, 2024 09:51 AM IST

Sivakarthikeyan : அவர் கஷ்ட காலத்தில் இருக்கும்பொழுது, அவருக்கு போன் செய்து, உன்னை நிறைய பேர் போட்டு அமுக்குகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். என்ன கஷ்டமாக இருந்தாலும் சொல், பார்த்துக் கொள்ளலாம் நான் உன்னுடன் இருக்கிறேன் என்று சொல்வேன். - சங்கீதா

Sivakarthikeyan: ‘காமெடியன்னா இவ்வளவுதான் வரும்’.. வார்த்தையை விட்ட சிவா.. மேடையிலேயே வெளுத்த சங்கீதா!
Sivakarthikeyan: ‘காமெடியன்னா இவ்வளவுதான் வரும்’.. வார்த்தையை விட்ட சிவா.. மேடையிலேயே வெளுத்த சங்கீதா!

கோபமான சிவகார்த்திகேயன்

இது குறித்து அவர் பேசும் போது, “சிவகார்த்திகேயன் எனக்கு மிகவும் பயப்படுவார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நடன நிகழ்ச்சியில், ஒரு கட்டத்தில் அவரும் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் நான் நடுவராக இருந்தேன். அன்றைய தினத்தில் அவர் ஆடியதில் எனக்கு கொஞ்சம் முரண்பாடான கருத்து இருந்தது. இதையடுத்து நான் அவரிடம் அதைச் சொன்னேன். உடனே, அவர் கோபம் அடைந்து விட்டார்.

சங்கீதா பேட்டி
சங்கீதா பேட்டி

நான் ஒரு காமெடியன் எனக்கு இவ்வளவுதான் வரும் என்று வார்த்தையை விட்டார். இதையடுத்து நானும் டென்ஷன் ஆகிவிட்டேன். ஆனாலும் நான் அவரிடம் சிவகார்த்திகேயன், உங்கள் உடம்பில் நடனத்துக்கான ரிதம் இருக்கிறது. நீங்கள் அதை ஒழுங்காக கற்றுக் கொண்டால், நன்றாக ஆடுவீர்கள் என்று நான் கூறினேன். மேலும், இது நீங்கள் கற்றுக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு. தயவு செய்து ஒழுங்காக கற்றுக் கொள்ளுங்கள் என்றேன். 

அறிவுரை கூறும் இடத்தில் நான் இல்லை

அதை சிவா மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டார். இதையடுத்து, அவருக்கு நடனம் சொல்லிக் கொடுத்த பள்ளியிலேயே ராப்பகலாக கதியாய் கடந்தார். தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டே இருந்தார். அந்த உழைப்பு அவரை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்தது. இன்று அவர் நடனம் ஆடுவதை பார்க்கும் பொழுது, ஒருவரை சரியாக வழி நடத்தி இருக்கிறோம் என்று மிக மிக சந்தோஷமாக இருக்கிறது.

ஆரம்ப கட்டத்தில் அவருடன் நான் மிகவும் நெருக்கமாக இருந்தேன். அவர் கஷ்ட காலத்தில் இருக்கும்பொழுது, அவருக்கு போன் செய்து, உன்னை நிறைய பேர் போட்டு அமுக்குகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். என்ன கஷ்டமாக இருந்தாலும்  சொல், பார்த்துக் கொள்ளலாம் நான் உன்னுடன் இருக்கிறேன் என்று சொல்வேன். ஆனால் இன்று அவர் மிகப்பெரிய ஆளாகி விட்டார். அதனால் அவருக்கு அறிவுரை கூறும் இடத்தில் நான் இல்லை. அவருக்கு என்னுடைய அறிவுரையெல்லாம் தேவைப்படாது. அவர் அறிவுரை கூறினால் நான் கேட்டுக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.