Citadel: வெப் தொடரில் மயங்கி விழுந்த சமந்தா - புதுத்தெம்பில் மீண்டு வந்து டப்பிங்கில் மும்முரம்
பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகியுள்ள சிட்டாடல் வெப் சீரிஸில் இந்திய வெர்ஷனில் சமந்தா மற்றும் வருண் தவான் ஆகியோர் நடிக்கின்றனர்.
ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ள ‘’சிட்டாடல்''என்னும் வெப்சீரிஸில் நடிகை சமந்தாவும், இந்தி நடிகை வருண் தவானும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை சமந்தா படப்பிடிப்பின்போது மயங்கி விழுந்துள்ளதாகத் தகவல் வெளியானது.
சிட்டாடல் அப்டேட்
இப்படத்தின் காட்சிகளை பாலிவுட் நடிகர் வருண் தவான் மற்றும் இயக்குநர் ராஜ் மற்றும் டி.கே.வுடன் இணைந்து நடிகை சமந்தா பார்வையிடுகிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நடிகை சமந்தா, "இறுதியாக, நாங்கள் ஏதாவது பார்க்க வேண்டும்.. நாங்கள் இப்படித்தான்" என்று கேப்ஷன் இட்டுப் பதிவிட்டுள்ளார். இந்த தொடருக்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாகவும் சமந்தா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை சமந்தா படப்பிடிப்பின்போது மயங்கி விழுந்துள்ளதாகத் தகவல் வெளியானது. மயோசிடிஸ் நோயில் அவதிப்பட்டு வரும் நடிகை சமந்தா, அரைமணி நேரம் கூட தன்னால் ஒரு இடத்தில் நிற்கமுடியாதபோதும், வெப் தொடரின் சண்டைக்காட்சிகளுக்காக மெனக்கெட்டதாகவும்; அப்போது மயங்கியதாகவும் கூறப்படுகிறது.
வெப் தொடரில் அறிமுகமாகும் வருண் தவான்:
நடிகை சமந்தா மயோசிடிஸ் நோய்ப்பாதிப்புக்குப் பின், ‘’தி ஃபேமிலி மேன் சீசன் 2'' என்னும் வெப் தொடரில் ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஓடிடிக்கு வந்தார். இந்த கதாபாத்திரத்தின் நிறத்திற்காக அவர் விமர்சிக்கப்பட்டாலும், அவரது நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் நடிகை சமந்தா நடிக்கும், சிட்டாடலின் இந்திய பதிப்பை அமேசான் பிரைம் தொகுத்து வழங்குகிறது. மேலும் இதன்மூலம் நடிகர் வருண் தவானும் முதன்முதலாக ஓடிடி தொடரில் கால் பதிக்கிறார். சாம் ஜாம் மற்றும் தி ஃபேமிலி மேன் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குப் பின், சமந்தாவின் திரைவாழ்வில் முக்கியமான ஒன்றாக இது இருக்கும் என கருதப்படுகிறது.
ரீமேக் அல்ல:
சமந்தா மற்றும் வருண் தவான் ஆகியோர் சிட்டாடல் படத்தில் நடிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டபோது, இந்தத் தொடர் பிரியங்கா சோப்ரா மற்றும் ரிச்சர்ட் மேடன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அமெரிக்க பதிப்பின் ரீமேக் என்று பலர் ஆச்சரியப்பட்டனர். மே 2023-ல் அவரது பதிவின் கீழ் இன்ஸ்டாகிராமில் ஒரு ரசிகர் அவரிடம் இதைக் கேட்டபோது, "இது ரீமேக் அல்ல!" என்று அவர் பதிலளித்தார். உண்மையில், இந்திய பதிப்பு ஆகும். ஆனால், இந்த தொடர் ஸ்பானிஷ், இத்தாலியன் மற்றும் மெக்சிகன் மொழிகளிலும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய நடிகர்களுக்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள் என பிரியங்கா ஷோப்ராவிடம் கேட்டபோது, "நான் அவர்களுக்கு எந்த ஆலோசனையும் வழங்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் தங்கள் சொந்த தளங்களில் திறமையான நடிகர்கள். நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. சில அருமையான ஸ்கிரிப்ட்கள், எங்கள் ஸ்கிரிப்ட்டுடன் இணைக்கின்றன. எனவே, நாங்கள் அவற்றைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். சுவாரஸ்யமாக, வருண் அமெரிக்க பதிப்பின் ஐந்தாவது அத்தியாயத்தில் ரஹி கம்பீராக குரல் கொடுத்தார். இதன்மூலம் இந்தியாவில் உருவாகும் சிட்டாடல் தொடரில், அவர் முன்னோடியாக இருக்கலாம்’’ என்று சுட்டிக்காட்டினார்.
சிட்டாடல் வெப் தொடர் - ஓர் அறிமுகம்:
கேப்டன் அமெரிக்கா மற்றும் அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் ஜோ மற்றும் அந்தோணி ருஸ்ஸோ ஆகியோரால் கற்பனையாக உருவாக்கப்பட்டது, சிட்டாடல் என்ற புலனாய்வு நிறுவனம் உள்ளது. இந்த ஏஜென்சி எந்த நாட்டிற்கும் சொந்தமானது அல்ல. ஆனால், அமெரிக்கத் தொடர் தொடங்குவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, அது ஒரு சக்திவாய்ந்த சிண்டிகேட்டான மான்டிகோரால் அழிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இதில் சிட்டாடலுக்கும் மான்டிகோருக்கும் இடையிலான போர் தான் இந்த சீரிஸ். ரூஸோ சகோதரர்கள், பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகியுள்ள சிட்டாடல் வெப் சீரிஸில் இந்திய வெர்ஷனில் சமந்தா மற்றும் வருண் தவான் ஆகியோர் நடிக்கின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9