Samantha Interview : டைவர்ஸ் ஆன உடனேயா? : சமந்தா வேதனை
நடிகை சமந்தா விவாகரத்து பெற்ற பின்னர், ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட ஒத்துக்கொண்டபோது அனைத்து தரப்பினரும், அந்தப்பாடலுக்கு நடனம் ஆட வேண்டாம் என்று அறிவுரை வழங்கினார்கள். நான் என்ன தவறு செய்தேன் என அவர் வருத்தமாக பேசினார்.
தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நடிகை சமந்தா,தெலுங்கு நடிகரும், நாகர்ஜீனாவின் மகனுமான நாகசைதன்யாவைகாதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும், கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்துள்ளார். இந்த நிலையில் தான்நடித்துள்ள சாகுந்தலம் பட விழா நிகழ்ச்சியில்விவாகரத்து குறித்து பரபரப்பான தகவலை சமந்தா வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்துஅவர் பேசும்போது, "நான் விவாகரத்து செய்ததும்சில நாட்களிலேயே எனக்கு புஷ்பா படத்தில் ஊம் சொல்றியா மாமா…பாடலுக்கு நடனம் ஆட வாய்ப்பு வந்தது. உடனே சம்மதித்து விட்டேன். அந்தப் பாடலில் ஆட ஒப்புக்கொண்டதும் குடும்பத்தினர்,தெரிந்தவர்கள் என தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வீட்டில் உட்கார்ந்து கொள் போதும். இப்போதுதான்விவாகரத்து செய்து இருக்கிறாய். உடனே நீ குத்துப்பாடலுக்குநடனம் ஆடுவது நன்றாக இருக்காது என்று ஆலோசனை வழங்கினார்கள்.
என்னைஎப்போதும் ஊக்குவிக்கும் சினேகிதர்கள் கூட அந்தப் பாடலைசெய்ய வேண்டாம் என்றார்கள். ஆனால் நான் அதை ஏற்கவில்லை. ஏனென்றால் திருமண பந்தத்தில் நான் நூறு சதவீதம்நேர்மையாக இருந்தேன். ஆனால் அது எனக்கு சரியாகஅமையவில்லை. அப்படி இருக்கும்போது நான் ஏதோ தவறுசெய்தவள்போல எதற்காக ஒளிந்து கொள்ள வேண்டும்.
நான்செய்யாத குற்றத்திற்கு என்னை நானே இம்சித்துக் கொண்டுஎதற்காக வருத்தப்பட வேண்டும். ஏற்கனவே எத்தனையோ வேதனைகளை அனுபவித்து விட்டேன்'' என்றார். சமந்தா பேச்சு பரபரப்பாகி உள்ளது.
சாகுந்தலம்படத்தில் சமந்தா சகுந்தலாவாகவும், மலையாள நடிகர் தேவ் மோகன் துஷ்யந்துவாகவும்நடித்து உள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜீ இந்தப் படத்தைத்தயாரிக்கிறார். இப்படம் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும்வெளியாகிறது. இப்படம் தொடர்பான பிரமோஷன் நிகழ்ச்சிகளில் சமந்தா கலந்துகொண்டு வருகிறார். அண்மையில் உடல் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா சிறிது காலம் ஓய்வில் இருந்தார். தற்போது மீண்டும் வழக்கம்போல் பரபரப்பாக சினிமாக்களில் நடிக்கத்துவங்கிவிட்டார்.
டாபிக்ஸ்