samantha pic after myositis: மயோசிடிஸ் சிகிச்சை இடையே யசோதா புரொமோஷனில் சமந்தா
மயோசிடிஸ் நோய் பாதிப்பு சிகிச்சைக்கு பிறகு தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் சமந்தா. நோய் பாதிப்பின் சிகிச்சைக்கு இடையே வரும் 11 வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கும் தனது யசோதா படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் மயோசிடிஸ் என அரிய வகை நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாக நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார். அவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, சமந்தா விரைந்து குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பலர் வாழ்த்துகளையும், தங்களது பிரார்த்தனைகளையும் வெளிப்படுத்தினர்.
இதையடுத்து சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள யசோதா திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் அதன் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
தற்போது நோய் பாதிப்புக்கான சிகிச்சையில் இருந்து வரும் சமந்தா, அதற்கு இடையிலும் தனது படம் ரசிகர்கள் மத்தியில் சேர வேண்டும் என கருதி படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அத்துடன் மயோசிடிஸ் நோய் பாதிப்பு சிகிச்சைக்கு பிறகு தனது முதல் புகைப்படத்தை சமந்தா பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் அதற்கு ஹார்ட் எமோஜிகள் க்ளிக் செய்து அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
சமந்தா இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள பதிவில், " எனது நண்பர் ராஜ் நிதிமோரு சொன்னது போல், உங்களுடனை நாள் எப்படி தொடங்கிநாலும், எவ்வளவு மோசமான விஷயங்கள் நடந்தாலும், ஒரே குறிக்கோளாக புத்துணர்சியுடன் உங்களை வெளிப்படுத்துங்கள்.
அந்த வகையில் யசோதா திரைப்பட விளம்பர நிகழ்ச்சிகளுக்காக அப்படியொரு நாளை கடன் வாங்கியுள்ளேன். 11ஆம் தேதி சந்திப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமந்தாவின் இந்த அர்பணிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவிப்பதோடு, உடல்நிலை நன்கு கவனித்துக் கொள்ளுமாறு அக்கறை கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே சமந்தாவின் இந்த லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
டாபிக்ஸ்