Salaar Trailer: பிரபாஸின் ‘சலார்’ ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Salaar Trailer: பிரபாஸின் ‘சலார்’ ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?

Salaar Trailer: பிரபாஸின் ‘சலார்’ ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?

Karthikeyan S HT Tamil
Aug 31, 2023 11:11 AM IST

பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படத்தின் ட்ரெய்லர் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் பிரபாஸ்
நடிகர் பிரபாஸ்

ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் செப்டம்பர் 28-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக ரிலீஸாகிறது.

‘பாகுபலி 2' படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு பெரிய அளவு ஹிட் கிடைக்காததால் அவரது ரசிகர்கள் 'சலார்' படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படம் ரிலீஸுக்கு முன்பே பல கோடி ரூபாய் வியாபாரம் செய்துள்ளதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'சலார்' படத்தின் ஓவர்சீஸ் உரிமை ரூ.90 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், தென்னிந்திய திரைப்படம் ஒன்றின் வெளிநாட்டு உரிமை இந்த அளவுக்கு விற்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

இப்படத்தின் டீசர் கடந்த ஜூலை 6 ஆம் தேதி வெளியாகி யூடியூபில் 129 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படக்குழு இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

'சலார்' ட்ரெய்லர் குறித்து நெட்டிசன்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் சலார் ட்ரைலர் ட்விட்டரில் டிரெண்டிங் ஆகிவருகிறது. கடந்த மாதம் படக்குழு வெளியிட்ட தகவலின் படி ஆகஸ்ட் மாத இறுதியில் 'சலார்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், வெளியாகவில்லை இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருந்த நிலையில் தற்போது செப்டம்பர் முதல் வாரத்தில் ட்ரெய்லர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, 14 வினாடி வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது. அதில், "மிக வன்முறையாளர் விரைவில் செப்டம்பர் 28 ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு முழு முகத்துடன் உங்கள் மனதைக் கவரும்" என்று ஹோம்பலே பிலிம்ஸ் ட்வீட் செய்திருந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.