Vijay on Trisha: சர்ச்சையோ சர்ச்சை… பாத்ரூம் வீடியோ முதல் விஜய் கிசுகிசு வரை! - த்ரிஷா திரியான கதை!
Vijay on Trisha: “எவ்வளவு தோல்விகளை சந்தித்தாலும், மீண்டும் எழும் தன்மை கொண்டதாக இருந்து இருக்கிறது. இதனையடுத்து அந்த கதாபாத்திரத்தின் பெயரையே அவருக்கு வைத்திருக்கிறார்கள்.” த்ரிஷா திரியான கதை!

Vijay on Trisha: விஜய் பிறந்தநாளுக்கு த்ரிஷா அவருடன் இருக்கும் போட்டோவை போட்டதுதான் மிச்சம்.. மொத்தம் சமூகவலைதளங்களும் விஜய்க்கும், த்ரிஷாவுக்குமான தொடர்பு உறுதியானது என்றும் அவரால்தான் விஜய் குடும்பத்தில் பிரச்சினை வெடித்திருக்கிறது என்றும் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், த்ரிஷா குறித்து பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் விசில் சேனலுக்கு பேசி இருந்தார்.
நாவலில் உதித்த பெயர்
அவர் பேசும் போது, “16 வயதிலேயே த்ரிஷா திரைத்துறைக்குள் நுழைந்து விட்டார். அம்மா உமா ஒரு மேக்கப் கலைஞர். அப்பா கிருஷ்ணன். இவர் பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் பணியாற்றியவர். உமாவும், கிருஷ்ணனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு பிறந்தவர்தான் த்ரிஷா.
திரிஷாவின் பாட்டி நிறைய நாவல்கள் படிப்பார். அப்படி ரஷ்ய நாவல் ஒன்றை படித்துக்கொண்டிக்கும் போது, அதில் ஒரு கதாபாத்திரம் த்ரிஷா என்ற பெயரில் வந்து இருக்கிறது. அந்த கதாபாத்திரம் எவ்வளவு தோல்விகளை சந்தித்தாலும், மீண்டும் எழும் தன்மை கொண்டதாக இருந்து இருக்கிறது. இதனையடுத்து அந்த கதாபாத்திரத்தின் பெயரையே அவருக்கு வைத்திருக்கிறார்கள். த்ரிஷா ஆரம்பத்தில் மாடலிங் துறையில்தான் கால்பதித்தார்.