Rachitha Mahalakshmi : என்னது தினேஷ் இல்லையா? அதிர்ச்சி.. இரண்டாவது திருமணத்திற்கு ரெடியான ரச்சிதா மகாலட்சுமி?!
நடிகை ரச்சிதா மறுமணம் செய்து கொள்ள போதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் சின்னத்திரை நாயகியாக அறிமுகமானவர், நடிகை ரச்சிதா மகாலட்சுமி. அப்போது அந்த சீரியலில் தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகர் தினேஷ் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.
இருவரும் ஒருவருக்கொருவர் மனதார காதலித்து இருவீட்டாரின் அனுமதியோடு திருமணம் செய்து கொண்டு, தத்தம் கேரியரில் கவனம் செலுத்தத் தொடங்கினர். அதன்படி, ரச்சிதா மகாலட்சுமி சரவணன் - மீனாட்சி தொடரில் நடிக்கத்தொடங்கினார்.
அவருக்கென்று ஒரு தனி ஃபேன் பேஸ் உருவானது. அதைத் தொடர்ந்து ரியல் ஜோடி இருவரும் இணைந்து, ஜீ தமிழில் நாச்சியார்புரம் சீரியலில் ரீல் ஜோடியாக நடிக்கத் தொடங்கினர்.
பின் கோவிட் 19 சூழலால் பாதியிலேயே அந்த சீரியல் கைவிடப்பட்டது. பின் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரிவு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வசித்து வருகின்றனர்.
அப்போது பல்வேறு பேட்டிகளில் தனது மனைவி ரச்சிதாவுடன் சேரமுடியாமல் இருப்பது குறித்த ஏக்கத்தை தினேஷ் வெளிப்படுத்தினார். அது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் வெளிப்பட்டது.
இதனிடையே பிக்பாஸ் சீசன் 7ல் இருந்த மற்றொரு பங்கேற்பாளரான விசித்ராவுக்கும் தினேஷுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. அப்போது பாத்திரம் தேய்த்துக்கொண்டு இருக்கும்போது, விசித்ரா, தினேஷின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கமெண்ட் செய்தார்.
மேலும், அப்போது கேமராவிடம் பேசுவதாக நினைத்து ரச்சிதா திரும்ப தினேஷ் கூட எல்லாம் சேர்ந்திடாதே என ஜாடை மாடையாகப் பேசினார். இதற்கு தொகுப்பாளர் கமல்ஹாசன் கூட கண்டனம் தெரிவித்தார்.
ஆனால் என்ன தான் தினேஷ் தன் அன்பை காட்டினாலும் ரச்சிதா அவரை மீண்டும் ஏற்று கொள்ளும் மனநிலமையில் இல்லை. தொடர்ந்து தினேஷ் பிக் பாஸ் வீட்டிற்கு இருந்த போதும் சரி வெளியே வந்த பிறகும் சரி அவருக்கு எதிராகவே பல கருத்துகளை சொல்லி வருகிறார்.
இந்நிலையில் ரச்சிதா மறுமணம் செய்து கொள்ள போதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆம்.. மாப்பிள்ளை யார்? என்ற அடுத்த கேள்விகள் தான் அடுத்து அடுக்கடுக்காக ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
கன்னடத்தில் ஒரு திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்து வருகிறார் ரச்சிதா. அந்த படம் வெளிவந்த பிறகு அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போகிறார்.
அதாவதது கன்னட பட இயக்குநரை திருமணம் செய்து கொள்ள போவதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. விரைவில் இது தொடர்பாக ரச்சிதா பதில் சொல்லுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பலரும் தினேஷை மனித்து ஏற்றுக் கொள்ளுங்கள் என அவருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக கணவன், மனைவியாக ரச்சிதாவும் இவரும் வாழ்ந்து வந்த நிலையில், இரண்டு வருடங்களாக இவர்கள் பிரிந்து வாழ்ந்தார்கள்.
க் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த தினேஷ் முதல் முறையாக பேட்டி அளித்து உள்ளார். அதில், ”நான் உள்ளே போகும் போது எப்படியாவது என்னுடைய வாழ்க்கை சரியாக விடும் என்ற நம்பிக்கையில் தான் சென்று இருந்தேன்.
டைட்டில் வென்று என்னுடைய வாழ்க்கையை மீண்டும் தொடரலாம் என நான் ஆசையோடு உள்ளே போனேன். ஆனால் வெளியே வந்து பார்த்தால் எந்த இடத்தில் இருந்ததோ அந்த மாதிரி தான் இருக்கிறது.
இதற்கும் மேலும் ரச்சிதா மனம் மாறுவார் என சொல்ல முடியவில்லை. ரச்சிதா ஒரு சுவற்றை எழுப்பி அந்த சுவற்றுக்குள்ளே இருந்து கொண்டு இருக்கிறார். அது என்னால் உடைக்க முடியாத வகையில் வலுவாக இருக்கிறது.
இதற்கும் மேலே இனி நான் அடுத்த வாழ்க்கையை நோக்கி பயணத்தை தொடர போகிறேன் “ என மனம் உடைந்து பேசினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்