தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Rrr Director Rajamouli Son Karthikeya Interview

ஆஸ்கருக்கு எவ்வளவு செலவு செய்தோம்… உண்மையை உடைக்கும் ராஜமௌலி மகன்

Priyadarshini R HT Tamil
Mar 28, 2023 11:02 AM IST

RRR Oscar Award : ஆர்.ஆர்.ஆர் படக்குழு ஆஸ்கர் பிரச்சாரத்திற்காக ரூ.80 கோடி செலவு செய்ததாக செய்திகள் வெளியானது. அதுகுறித்து பேசியுள்ள கார்த்திகேயா, படக்குழுவினர் கோடிகளில் பணத்தை செலவு செய்தது உண்மைதான்.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

ஆர்.ஆர்.ஆர். படக்குழு ஆஸ்கர் அகாடமி விருதுகள் பெற்று திரும்பியது முதல் அவர்கள், ஆஸ்கர் பிரச்சாரத்திற்காக படக்குழு ரூ.80 கோடி செலவு செய்தது என்ற செய்தி உலா வந்தது. ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் அகாடமி விருதுகளில் சிறந்த ஒரிஜினில் பாடல் பிரிவில் வென்றது.  

கார்த்திகேயா அவரது அண்மை பேட்டியில், அதற்கு விளக்கமளித்தார். அவர் கூறுகையில், அவர்கள் அவ்வளவு பெரிய தொகையை செலவு செய்யவிலை. நாங்கள் 5 கோடி ரூபாய் செலவு செய்ய முடிவு செய்தோம். ஆனால், திட்டமிட்டதைவிட அதிகமான தொகைதான் செலவானது. பாடல் பிரச்சாரத்திற்காக ரூ.8.5 கோடி செலவு செய்யப்பட்டது. ஆர்.ஆர்.ஆர் படத்தின் பிரச்சாரத்திற்காக அமெரிக்காவின் இரண்டு நகரங்களில் சிறப்பு காட்சி நடத்தப்பட்டது. நாங்கள் நியூயார்க்கில் இன்னும் சில காட்சிகள் தேவை என்று நாங்கள் எண்ணியிருந்தோம். அதைவிட குறைவாகவே திரைப்படம் திரையிடப்பட்டது என்று அவர் கூறினார்.   

அதற்காக அதிக பணம் செலவிடப்பட்டது. வழக்கமாக அதற்கு வாக்காளர்கள் அழைக்கப்படுவார்கள். ஆஸ்கர் விருதை வாங்குவது மற்றும் விழாவில் பங்கேற்பதற்காக 2500 டாலர்கள் செலுத்துவது ஆகியவை குறித்து பேசுகையில், ராம் சரண், ஜீனியர் என்டிஆர், பிரேம் ரக்ஷித், கால பைரவா, ராகுல் சிப்லிகஞ்ச், கீரவாணி மற்றும் சந்திரபோஸ் ஆகிய அனைவரும் அழைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களுக்கு சில சீட்கள் ஒதுக்கப்பட்டது. ஏனெனில் அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை அழைத்து வருவதற்கான சீட்கள் அவை. அவர்கள் யாரை அழைத்து வருகிறார்கள் என்று அகாடமிக்கு மெயில் அனுப்ப வேண்டும். அதற்கு பல்வேறு வகையான சீட்கள் இருந்தன. அதற்கு அவர்கள் பணம் செலுத்த வேண்டும். நாங்கள் 1500 டாலர் தொகையை லோயர் லெவலில் ஒரு சீட்டுக்கு கொடுத்தோம். அதற்கும் அடுத்த கட்டமாக டாப் லெவலுக்கு ஒரு சீட்டுக்கு 750 டாலர் கொடுத்தோம். அவ்வளவுதான். 

மேலும் அவர் கூறுகையில், ஆஸ்கர் விருதை விலை கொடுத்து வாங்க முடியாது. மக்களின் அன்பையும் விலை கொடுத்து வாங்க முடியாது. உலகம் முழுவதும் ஆர்.ஆர்.ஆர். படம் ரூ.1,200 கோடியை வசூலித்தது. தியேட்டரில் வசூலிக்கப்பட்ட தொகை இது. மேலும் முதலில் ஒரு பாட்டிற்கு விருது வாங்கிய இந்திய திரைப்படம். 

ஆர்.ஆர்.ஆர். 1920ம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் நடைபெற்ற கதையை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்ட படம். இரண்டு புரட்சியாளர்களின் கதையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம். அவர்கள் அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமாராம் பீம். ராம்சரண் ராமாகவும், ஜீனியர் என்டிஆர் பீமாகவும் நடித்தார்கள்.   

IPL_Entry_Point

டாபிக்ஸ்