Robo Shankar: குடும்பத்தோடு ஜிம்மில் முகாமிட்ட ரோபோ ஷங்கர்! ஏன் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Robo Shankar: குடும்பத்தோடு ஜிம்மில் முகாமிட்ட ரோபோ ஷங்கர்! ஏன் தெரியுமா?

Robo Shankar: குடும்பத்தோடு ஜிம்மில் முகாமிட்ட ரோபோ ஷங்கர்! ஏன் தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 17, 2023 12:13 PM IST

நடிகரும், டிவி பிரபலமுமான ரோபோ ஷங்கர் தனது மனைவி, மகள், மருமகன் என குடும்பத்தினர் அனைவருடனும் ஜிம்மில் முகாமிட்டுள்ளார். இதுதொடர்பாக விடியோ ஒன்றையும் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

ஜிம்மில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் ரோபோ ஷங்கர் குடும்பத்தினர்
ஜிம்மில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் ரோபோ ஷங்கர் குடும்பத்தினர்

இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு உள்பட பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் பிரபமான பின்னர் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து குடிப்பழக்கத்தினால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

பின்னர் அதிலிருந்து மெல்ல மீண்டு வந்த அவர் உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியாக காணப்பாட்டார். தற்போது தனது உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் ஜிம்மில் களமிறங்கி உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க முயற்சி செய்துள்ளார்.

அந்த வகையில் ரோபோ ஷங்கர் மட்டுமில்லாமல், தனது மனைவி பிரியா, மகள் இந்திரஜா, மருமகன் கார்த்திக் என ஒட்டுமொத்த குடும்பத்தினருடன் ஜிம்மிக்கு சென்று பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளார். அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட உடல் எடையை குறைக்க முயற்சித்து வருகிறார்களாம்.

இதுதொடர்பாக இந்திரஜா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த பதிவில், "துணிந்தவன் முன் வந்தால் விதிகளை மதி வெல்லும். ஒட்டு மொத்த குடும்பத்தினரும் ஜிம்மில் இருக்கும் போது எங்களை ட்ரெயின் பண்ற கஷ்டம் ஜிம் மாஸ்டருக்கு மட்டும் தான் தெரியும்" என்று குறிப்பிட்டு ஜிம்மில் அனைவரும் பயிற்சி மேற்கொள்ளும் விடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் பயர் விட்டிருப்பதுடன், ரோபோ ஷங்கருக்கு வாழ்த்தும், பாசிடிவ்வான கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.