RK Suresh: ‘ஜாதி வெறி பிடிச்சவன்னு; ஒரு செக் பவுன்ஸ் ஆகி இருக்கா? - RK சுரேஷ்!
நான் கிட்டத்தட்ட 15 வருடங்களாக இந்த சினிமா துறையில் ஒரு தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும், நடிகராகவும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
இயக்குநர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் ஆர்.கே. சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் காடு வெட்டி. இந்தத்திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் நடந்தது.
பாமக கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்த காடுவெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த
நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ஆர்.கே.சுரேஷ், “ஒன்றரை வருடமாக என்னை பற்றி கற்பனையான கட்டுக்கதைகள் வந்து கொண்டே இருந்தன. ஒரு பக்கம் அதை பார்த்து நான் சிரித்தாலும், சில விஷயங்கள் என் மனதை மிகவும் புண்படுத்தின.
நான் கிட்டத்தட்ட 15 வருடங்களாக இந்த சினிமா துறையில் ஒரு தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும், நடிகராகவும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
என்னை பத்திரிகையாளர்கள் அனைவருக்குமே நன்றாக தெரியும். எனக்கு என்னுடைய கட்சி மட்டுமில்லாமல் பிற கட்சிகளிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் எல்லா தலைவர்களுடனும் எனக்கு பழக்கம் இருக்கிறது . இந்த சினிமா துறையில் நான் அனுப்பிய ஒரு காசோலை திரும்பி இருக்கிறதா? என்னைப் பற்றி எங்கேனும் சொல்லப்பட்டு இருக்கிறதா? நான் எப்படி ஆருத்ரா கோல்டு மோசடியில் ஈடுபட்டு இருப்பேன்.
இந்த கஷ்டமான காலகட்டத்தில் என்னுடன் இருந்த ரசிகர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். காடுவெட்டி அவர்களின் கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது.
இந்த படம் ஜாதி படம் கிடையாது. இது இரண்டு தரப்பினருக்கான படம். என்னை பலரும் ஜாதி வெறி பிடித்தவன் என்று சொல்கிறார்கள். நான் எந்த ஜாதியையும் தவறாக பேசவில்லை.
எல்லோருமே ஒன்றுதான் அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அவரவர்கள், அவரது குடும்பத்தை பாதுகாத்துக் கொள்கிறார்கள். வட மாவட்ட குடும்பத்தை பாதுகாத்தவர் காடுவெட்டி” என்று பேசினார்.
டாபிக்ஸ்