தெறிக்க விடும் கருணாஸ்! மாறுபட்ட கோணத்தில் ஆர்ஜே பாலாஜி! வெளியானது சொர்க்கவாசல் டீஸர்!
ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி நாயகனாக நடிக்கும் ஆக்ஷன்-டிராமா திரைப்படமான சொர்க்கவாசல் டீஸர் வெளியாகியுள்ளது.

ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி நாயகனாக நடிக்கும் ஆக்ஷன்-டிராமா திரைப்படமான சொர்க்கவாசல் டீஸர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் சிறையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது.
ஆர் ஜே பாலாஜி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்கும் ஆக்ஷன்-டிராமா திரைப்படமாக 'சொர்க்கவாசல்' உருவாகி உள்ளது. இப்படத்தை பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' திரைப்படங்களில் உதவி மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிய சித்தார்த் விஸ்வநாத் இயக்குகிறார்.
இயக்குநர் செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமாகிய நட்டி (நடராஜன் சுப்பிரமணியன்) மலையாள திரையுலகை சேர்ந்த பிரபலங்களான சானியா ஐயப்பன், ஷரஃப் உதீன் மற்றும் ஹக்கீம் ஷா, இயக்குநர் பாலாஜி சக்திவேல், கருணாஸ், இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தை ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன் மற்றும் மெளரிஷ் ஆகியோர் சொர்க்கவாசல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.