Rj balaji interview: 21 வயதில் கல்யாணம்.. மண்டையை பிய்க்க வைக்கும் EMI.. உடன் நின்ற உதிரம்! பாலாஜி பேட்டி!
கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நானும் என் மனைவியும் அப்படியே காலத்தை ஓட்டினோம். அந்த நான்கு வருடத்தில் எனக்கும் என் மனைவிக்கும் இடையே நல்ல நெருக்கம் உண்டானது. ஒருவருக்கொருவர் வீட்டுப் பிரியாமல் இருந்ததை உணர்ந்தோம்.
பிரபல நடிகரான ஆர்.ஜே. பாலாஜி தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி இங்கே!
அதில் அவர் பேசும் போது, “ எனக்கு கல்யாணம் ஆகும் பொழுது எனக்கு 21 வயதுதான். என்னுடைய மனைவிக்கு என்னை விட இரண்டு வயது குறைவு. இதில் சிறப்பு என்னவென்றால், எனக்கு எப்படி கணவனாக நடக்க தெரியாதோ, அதேபோல அவளுக்கும் அந்த சமயத்தில் மனைவியாக நடந்து கொள்ளத் தெரியாது.
என்னுடைய வீட்டில் ஏற்கனவே ஆறு பேர் இருந்தார்கள். இவர்களுடன் என்னுடைய மனைவியும் இணைந்தார். ஆகையால், மொத்த குடும்ப பொறுப்பும் என் தலை மீது வந்து விழுந்தது. பண நெருக்கடியில் பலமுறை நான் தவித்து இருக்கிறேன். நான் 3 பர்சனல் லோன்களை எடுத்திருந்தேன். இது தவிர கிரெடிட் கார்டுகளிலும் கடன் வாங்கி இருந்தேன்.
கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நானும் என் மனைவியும் அப்படியே காலத்தை ஓட்டினோம். அந்த நான்கு வருடத்தில் எனக்கும் என் மனைவிக்கும் இடையே நல்ல நெருக்கம் உண்டானது. ஒருவருக்கொருவர் வீட்டுப் பிரியாமல் இருந்ததை உணர்ந்தோம்.
பின்னாளில், நான் மிகவும் இளம் வயதில் திருமணம் செய்து கொண்ட முடிவு மிகச்சரியானது என்பதை உணர்ந்தேன். 21 வயதிலேயே குடும்ப கஷ்டங்களை பார்க்க ஆரம்பித்து விட்டதால் 25 வயதில் நான் பொறுப்பான மனிதனாக மாறிவிட்டேன்.
இப்போது கல்யாணம் செய்து கொள்ளும் பெண்கள், கணவனை மட்டும் ஏற்றுக் கொள்கிறார்களே தவிர அவர்களின் குடும்பத்தை ஏற்றுக் கொள்வது கிடையாது. ஆனால் அது உண்மையில் தவறு. என்னுடைய குடும்பத்தில் ஆட்கள் குறைவு என்றாலும், என்னுடைய மனைவி குடும்பத்தில் உறவினர்கள் அதிகம். இதனால் என்னுடைய குடும்பம் 25 நபர்களாய் மாறியது. குடும்பம் மிக மிக முக்கியம்” என்று பேசினார்.
டாபிக்ஸ்