Riyaz Khan: ‘போனில் ஆபாச உரையாடல்.. என்ன மட்டுமல்லாம அவங்களையும் படுக்கைக்கு..’ - ரியாஸ் மீது மலையாள நடிகை புகார்!-riyaz khan accused of misconduct by actress who raised allegations against siddique in malayalam cinema - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Riyaz Khan: ‘போனில் ஆபாச உரையாடல்.. என்ன மட்டுமல்லாம அவங்களையும் படுக்கைக்கு..’ - ரியாஸ் மீது மலையாள நடிகை புகார்!

Riyaz Khan: ‘போனில் ஆபாச உரையாடல்.. என்ன மட்டுமல்லாம அவங்களையும் படுக்கைக்கு..’ - ரியாஸ் மீது மலையாள நடிகை புகார்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 25, 2024 08:26 PM IST

Riyaz Khan: போட்டோகிராஃபர் ஒருவரிடம் இருந்து என்னுடைய அனுமதி இல்லாமல் என்னுடைய போன் நம்பரை வாங்கிய ரியாஸ் கான், என்னை தொடர்பு கொண்டு ஆபாசமான உரையாடலில் ஈடுபட்டு, படுக்கைக்கு அழைத்தார்.

Riyaz Khan: ‘போனில் ஆபாச உரையாடல்.. என்ன மட்டுமல்லாம அவங்களையும் படுக்கைக்கு..’ - ரியாஸ் மீது ம்லையாள நடிகை புகார்!
Riyaz Khan: ‘போனில் ஆபாச உரையாடல்.. என்ன மட்டுமல்லாம அவங்களையும் படுக்கைக்கு..’ - ரியாஸ் மீது ம்லையாள நடிகை புகார்!

இதனையடுத்து மலையாள நடிகை ஒருவர் ( ரேவதி சம்பத் என்று சொல்லப்படுகிறது) கேரள நடிகர் சங்கமான மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (AMMA) பொதுச் செயலாளர் நடிகர் சித்திக் மீது பாலியல் புகாரை முன்வைத்தார். இதனையடுத்து அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

படுக்கைக்கு அழைத்தார்

இந்த நிலையில் சித்திக் மீது குற்றச்சாட்டை வைத்த அதே நடிகை தமிழ் மற்றும் மலையாள உலகில் பிரபலமான நடிகரான ரியாஸ் கான் மீதும் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அவர் பேசும் போது, போட்டோகிராஃபர் ஒருவரிடம் இருந்து என்னுடைய அனுமதி இல்லாமல் என்னுடைய போன் நம்பரை வாங்கிய ரியாஸ் கான், என்னை தொடர்பு கொண்டு ஆபாசமான உரையாடலில் ஈடுபட்டு, படுக்கைக்கு அழைத்தார்.

அத்தோடு அவர் நிற்கவில்லை.அவரின் ஆசைக்கு இணங்கக்கூடிய என்னுடைய நண்பர்களை, அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்குமாறும் கூறினார். அவரும் சித்திக் போன்று திரைத்துறையில் இருந்து ஒதுக்கப்பட வேண்டியவர்தான். அவர் நல்ல மனிதர் கிடையாது. அவர் என்னைப்போன்ற பல பெண்களை நசுக்கி இருக்கிறார். பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கும் எனக்கு, இன்னும் போதுமான போலீஸ் பாதுகாப்பும், திரைதுறையில் இருந்து கிடைக்கும் ஆதரவும் கிடைக்காமல் இருக்கிறது. இது எனக்கு ஏமாற்றத்தை தருகிறது.” என்று பேசினார்.

சித்திக்கின் பதில் என்ன?

முன்னதாக, மலையாளத்தில் 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சித்திக் பேசும் போது "எனது ராஜினாமா கடிதத்தை AMMA மோகன்லாலிடம் தெரிவித்துள்ளேன். என் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் வெளிச்சத்தில் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். அந்தப் பதவியில் தொடர்வது எனக்கு உகந்ததல்ல. குற்றச்சாட்டுகள் குறித்து நான் இப்போது பேச விரும்பவில்லை" என்றார்.

ஹேமா அறிக்கை குறித்து சித்திக்கிடம் கேட்ட போது, “, "அறிக்கையையும் அதன் கண்டுபிடிப்புகளையும் நாங்கள் வரவேற்கிறோம். குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் செயல்படுத்த வேண்டும், ஏனெனில் இது தொழில்துறையில் வேலை நிலைமைகளை மேம்படுத்த வழிவகுக்கும்.” என்றார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.