Rithika marriage: கோயிலில் திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rithika Marriage: கோயிலில் திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை

Rithika marriage: கோயிலில் திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை

Aarthi V HT Tamil
Nov 20, 2022 12:41 PM IST

நடிகை ரித்திகா திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

 ரித்திகா திருமண புகைப்படங்கள்
ரித்திகா திருமண புகைப்படங்கள்

இவர் அதற்கு முன்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமையல் செய்யும் போட்டியாளராக கலந்து கொண்டார். அதில் அவர் பாலாவுடன் சமைத்த எப்பிசோட்கள் வரவேற்பை பெற்றது. 

அத்துடன் பாலா அவரிடம் காதலிப்பதாக செய்யும் சேட்டைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ரித்திகாவும், விஜய் டிவியில் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றி வரும் வினு என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களின் திருமணத்திற்கு இரண்டு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் இன்று கேரளாவில் உள்ள கோயிலில் மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர்.

ரித்திகா தனது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ரித்திகாவின் திருமண புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், அப்போ மாப்பிள்ளை பாலா இல்லையா என கேட்டு வருகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.