RIP Marimuthu:ஆஃப் செய்யப்பட்ட ஏசி?; வேர்க்க விறுவிறுக்க வந்த மாரிமுத்து;வாயில் தள்ளிய நுரை! - மாரியின் இறுதி நிமிடங்கள்
மாரிமுத்துவின் இறுதி நிமிடங்கள் குறித்து எதிர்நீச்சல் பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “அவர் டப்பிங் ஸ்டியோவில் டப்பிங் பேசிக் கொண்டிருந்தார். அவர் வேறு ஷூட்டிங்கிற்கு செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. நான் ஒரு 8 மணி அளவில் அங்கு வந்தேன். பேசிக் கொண்டிருந்த அவருக்கு திடீரென்று உடலில் அசெளகரியமான சூழ்நிலை உருவானது.
டப்பிங் ஸ்டுடியோவில் ஏசியை ஆஃப் செய்து விட்டு பேசுவதால், ஒரு சிலருக்கு அசெளகரியமான சூழ்நிலை நிலவுவது வழக்கம்தான். அந்த மாதிரியான சமயங்களில் ஒரு இரண்டு நிமிடங்கள் ஏசியை போட்டு விட்டு, கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துவிட்டு மீண்டும் டப்பிங் பேசுவோம்.
ஆனால், மாரிமுத்து திடீரென்று கிளம்பி வெளியே வந்து விட்டார். அவருக்கு பயங்கரமாக வேர்த்து வடிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த நான் உடனே என்ன சார் திடீரென்று புதிதாக இப்படி வேர்க்கிறது என்று கேட்டேன். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்லி, அவர் வெளியே கிளம்பிவிட்டார்.
இதனிடையே, நாம் டப்பிங் பேசி விடலாம் என்று சொல்லி நான் உள்ளே சென்று விட்டேன். 10, 15 நிமிடங்கள் கழித்தும் மாரிமுத்து டப்பிங் ஸ்டுடியோவிற்கு வரவில்லை. போன் அடித்தும் அவர் எடுக்கவில்லை. இதற்கிடையே அவர் அங்கிருந்து சூர்யா மருத்துவமனைக்கு செல்வதற்காக காரை எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்.
இதற்கிடையே தன்னுடைய மனைவிக்கு கால் செய்து தனக்கு உடல் நலத்தில் ஏதோ பிரச்சனை இருப்பது போல தெரிகிறது என்றும் ஆகையால் நாம் காவேரி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் ரெடியாக இரு என்றும் சொல்லியிருக்கிறார்.
ஆனால் அவர் சூர்யா மருத்துவமனையின் வாசல் அருகில் செல்லும் போதே முழுவதுமாக நிலை குலைந்து விழுந்து விட்டார். நான் டப்பிங் பேசி முடித்துவிட்டு போன் அடித்தேன். அப்போதும் அவர் ஃபோன் எடுக்கவில்லை. இதனையடுத்து, அவரை பாத்ரூம் உள்ளிட்ட பல இடங்களில் தேடினேன்.
இந்த நிலையில் தான் நாங்கள் அடித்த போனிற்கு அவரது மகள் எடுத்து பதில் சொன்னார். அவர்தான் இந்த ஒரு அதிர்ச்சிகரமான தகவலை எங்களுக்கு சொன்னார். உடனே நாங்கள் மருத்துவமனைக்குச் சென்றோம். ஆனால் அங்கு அவர் வாயில் நுரை தள்ளி அப்பவே இறந்து விட்டார் என்று இறந்து விட்டதாக மருத்துவர் கூறினார்” என்று பேசினார்
நன்றி: பிஹைண்ட் வுட்ஸ்!
டாபிக்ஸ்