‘எனக்கு டிசிப்ளின்தான் முக்கியம்’ விஜய் கூப்பிட்டதால்தான்.. தமிழன் காமெடிகள் இப்பவும் வேற மாறி - டெல்லி கணேஷ்
தமிழன் திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்த நடித்த அனுபவம் குறித்து மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் பேசியவற்றை இங்கே பார்க்கலாம்.

எனக்கு டிசிப்ளின்தான் முக்கியம்’ விஜய் கூப்பிட்டதால்தான்.. தமிழன் காமெடிகள் இப்பவும் வேற மாறி - டெல்லி கணேஷ்
தமிழ் சினிமாவில் காமெடியன், வில்லன், குணச்சித்திர நடிகனாக 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். தற்போது 80 வயதாகும் அவர், மருத்துவரின் ஆலோசனைப்படி, மது குடிப்பது, புகைப் பிடிப்பது போன்ற பழக்கங்களில் இருந்து வெளியேறியிருந்த நிலையில், அவர் நேற்று இரவு 1 மணிக்கு உயிரிழந்துள்ளார். அவரது உடல் மக்கள் அஞ்சலிக்காக சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
