RIP Captain Vijayakanth: விஜயகாந்த் கடந்து வந்த அரசியல் பயணம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rip Captain Vijayakanth: விஜயகாந்த் கடந்து வந்த அரசியல் பயணம்!

RIP Captain Vijayakanth: விஜயகாந்த் கடந்து வந்த அரசியல் பயணம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Dec 28, 2023 10:30 AM IST

RIP Captain: மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவர் கடந்து வந்த அரசியல் பாதையை குறித்து இங்கு பார்க்கலாம்.

நடிகர் விஜயகாந்த்
நடிகர் விஜயகாந்த் ( Rajasekar ( Twitter))

திரையில் உச்ச நடிகராக வலம் வந்த விஜயகாந்த் தமிழகம் முழுவதும் இருந்த ரசிகர்களை தன் நற்பணி மன்றம் மூலம் ஒருங்கிணைத்தார். அதன் வழியாக ஏழைகளுக்கு இலவச தையல் இயந்திரம், இலவச மருத்துவமனை, அலுவலகத்தில் சாப்பாடு, இரத்த தானம் என பல நல்ல காரியங்களை முன்னெடுத்தார்.

அவ்வப்போது அரசியல் தொடர்பான விஷயங்களை கூர்ந்து கவனிக்கவும் தேவையான இடங்களில் எதிர்வினையாற்றவும் செய்தார். திமுக தலைவர் மீது அன்பு கொண்டிருந்தார். எம்ஜிஆரின் பிரச்சார வாகனத்தை ஜானகியம்மாளிடம் பரிசாக வாங்கி வைத்திருந்தார்.

தனது ரசிகர் மன்றத்திற்காக தனி கொடியை உருவாக்கி அதில் தன் மன்ற உறுப்பினர்களை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வைத்தார். அதில் அவர்களுக்கு கணிசமான வெற்றி கிடைத்தது.

ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரு பெரும் ஆளுமைகள் அரசியலில் கோலோய்ச்சிய காலத்திலேயே 2005ல் துணிச்சலுடன் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கட்சியை மதுரையில் தொடங்கினார்.

விஜயகாந்த் அரசியல் பேச்சுகள் எதார்த்தமாகவே மக்களால் கொண்டாடப்பட்டது.

2006ல் நடந்த சட்ட மன்ற தேர்தலில் தனது கட்சி சார்பில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார். இதில் அவர் மட்டும் விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்றார்.

கடந்த 2009ல் நடந்த மக்களவை தொகுதியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றது தேமுதிக. கடந்த 2011ல் நடந்த சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார் விஜயகாந்த். இந்த தேர்தலில் தேமுதிக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது.

சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. அது கூட்டணி முறிவுக்கு இட்டு சென்றது.

இதையடுத்து 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் கை கோர்த்தார். இதில் 14 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டு தோல்வியை தழுவியது.

2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவை கூட்டணிக்குள் அழைக்க திமுக முயன்றது.

இந்நிலையில் அதிமுக திமுகவை எதிர்த்து மக்கள் நலக்கூட்டணியுடன் கை கோர்த்தார் விஜயகாந்த்.

ஆனால் அந்த தேர்தலில் தேமுதிகவிற்கு படு தோல்வி கிடைத்தது. விஜயகாந்தே தோற்று போனார். வாக்குசதவிகிதமும் இரண்டரைக்குள் சுருங்கியது.

தேமுதிகவின் வாக்கு வங்கி குறைந்தாலும் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான அணியில் தேமுதிக இடம் பெற்றது. தேர்தலின் முடிவில் தேமுதிக படுதோல்வியையே சந்தித்தது.

இதையடுத்து விஜயகாந்த் முற்றிலும் உடல் நலம் பாதிக்கப்பட்ட பின்னர் நடந்த 2021 சட்ட மன்ற தேர்தலிலும் தேமுதிக கடும் பின்னடைவையே சந்தித்தது.

ஆனால் தேர்தலில் வெற்றி தோல்வி என்பதை தாண்டி விஜயகாந்த் மரணம் அடைந்துள்ள நிலையில் அவரது வீடு முன் கூடும் அவரது கட்சிச்தொண்டர்கள் அவரது இழப்பை தாங்க முடியாமல் கதறி அழும் காட்சிகள் விஜயகாந்த் உடல் நிலை கைகொடுத்திருந்தால் திரைத்துறையை போலவே அரசியலிலும் ஜொலித்திருப்பார் என்றே நம்பிக்கை அளிக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.