RIP Captain Vijayakanth: வாழ்நாள் முழுவதும் என் குறையாகவே இருக்கும் நடிகர் கார்த்தி வருத்தம்
RIP Captain: விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மரியாதை செய்ய முடியவில்லை என்பது வாழ்நாள் முழுவதும் என் குறையாகவே இருக்கும் என்றும் கார்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார்
Captain Vijayakanth Passed Away: நடிகரும் தேதிமுக நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவால் கடந்த 28ஆம் தேதி இயற்கை எய்தினார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் தேமுதிக அலுவலகத்தில் உள்ள நினைவிடத்தில் இன்று காலை நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன் நடிகர் கார்த்திக் இருவரும் அஞ்சலி செலுத்தினர்.
இதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி வரும் 19ஆம் தேதி நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்த்திற்கு இரங்கல் கூட்டம் நடைபெறும். புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் எழுப்பியுள்ளனர். அன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் அதன் பிறகு அது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றார். மேலும் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மரியாதை செய்ய முடியவில்லை என்பது வாழ்நாள் முழுவதும் என் குறையாகவே இருக்கும் என்றும் கார்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார்
முன்னதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இருமல், சளி மற்றும் தொண்டை வலி பாதிப்பு அவருக்கு இருந்த நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.
அவரது உடல் நிலை சற்று தேறிய நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் தேதி விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி அன்று உடல் நிலைக்குறைவு காரணமாக மீண்டும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 28ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் 29ம் தேதி மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்